பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் .

பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் .
பணி:பேராசிரியர் .
அறியப்படுதல்: தமிழறிஞர்,புலவர், நாளிதழ் ஆசிரியர்.
பிறப்பு : குடத்திங்கள் 20-ஆம் நாள் 1876 .
நீத்தல் : மீனத்திங்கள் 13-ஆம் நாள் 1936.
பிறந்த இடம்: காவேரிப்பாக்கம், வட ஆற்காடு மாவட்டம் தமிழ்நாடு.
நாடக நூல்கள்
பிருதிவிராசன், கீசகன், தேசிங்குராசன், சனகன் என்ற தலைப்புகளில் நாடக நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
மேலும் நாடகமஞ்சரி என்ற பெயரில் பத்து நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு, மேடைகளில் அரங்கேறின.
உரைகள்
சிறந்த குழந்தைக் புலவனாகவும் திகழ்ந்த நமச்சிவாயர், ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். “நன்னூல் காண்டிகை’ என்னும் இலக்கண நூலுக்கும் உரை கண்டார். “தமிழ்க்கடல்’ என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவி, தணிகை புராணம், தஞ்சைவாணன் கோவை, இறையனார் களவியல், கல்லாடம் முதலான நூல்களைப் பதிப்பித்தார்.
நன்றி .




