
ஆராரோ ஆரிராரோ
அழாதே!என் மகனே
எதை நினைத்து நீ அழகுற
தாய் நான் வந்துவிட்டேன் ஆராரோ…
பால் பொடி தீங்கு என்று
தாய் பாலில் தான் சத்துருக்க
ஆரோக்கியமாக நீ வளர
ஆரிய கூலு நான் தாரேன்!
இளம்பிள்ளைவாதம் மருந்து போடணுமே அழாதே! முத்தே தேன்மிட்டாய் வாங்கி தரேன்!
ஆராரோ ஆரிராரோ அழாதே!
இந்தக்கால கைபேசியில்பாட்டு
கேட்டு தூங்காதே இந்த தாயின் வாய்மொழி தாலாட்டு கேட்டு நீ
தூங்கு என் கண்ணே மணியே!
மகேசுவரன்




