சொல்விளக்கம்
மிடைதல்

மிடைதல்
‘புதுமலர் மிடைந்த மாலை'(குறு273) என
‘நெருங்க கட்டிய மாலை குறிக்கப்படுகிறது.
மிடைதல் ,செறிதல்,நெருங்குதல் ,கலத்தல்.
மணிமிடை பவளம் என்றால் மணியொடு
கலந்த பவளம். கலந்து கட்டிய
எனலாம் (அகம் 304).
மிடை -அக்காலத்தில் நெருக்கிக் கட்டப்பட்ட
பரணைக் குறித்தது முண்டு . முள்மிடை/குடம்பை.
முள்ளால் மிடையப்பெற்ற (நெருக்கிக் கட்டப்பட்ட)பறவைக்கூடு (அகம் 270).
பாய் மிடைதல்/தடுக்கு மிடைதல்/கட்டில்
மிடைதல்/கூடை மிடைதல் எனல்
வேண்டும் . மிடைதல் நெருக்கமாக கட்டிப்பின்னுதல் என்பதே அதன் பொருள்.
“மிடைதலை”முடைதலென்று பகர்வது பேச்சு
வழக்கு. முடைதலே பின்னுதலாகும் .
செவ்விய நடையில் கூடை மிடையும் தொழில் : கட்டில் மிடைவோர் என்பதே நல்லது.தமிழறிஞர்
அரங்கண்ணல்




