பிரியாணி என்ற பாரசீகச் சொல்லும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழ்ச்சொல்லின் குழப்பமும் தெளிவும்.
“நறுசுவைச்சோறு”

“பிரியாணி “ இச்சொல்லானது பாரசீக மொழியிலிருந்து வந்த ஒருசொல் . ஆயினும் பிரியாணி தமிழர் வாழ்வியலோடு கலந்துள்ள ஒரு சிறப்பு உணவாக இருக்கின்றது .
பிரியாணியின் சிறப்பு :
இவ்வுணவானது அரிசி கொண்டு சமைக்கப்படும் ஓருணவாகும் . இதற்கான சிறப்பைக்கொடுப்பது கலவைகள் . அதாவது இதற்காக பயன்படுத்தப்படும் நறுமணம் தரக்கூடிய கலவைப்பொருட்கள் . இதனால்தான் பிரியாணியை எல்லோரும் விரும்பி உண்பர்.
பிரியாணிக்கு தமிழில் பரவலாக
ஊன் சோறு என்று சொல்கின்றனர் . தமிழ் இலக்கியங்கள் கூறும் ஊன் சோறுதான் இது என்பது அறிஞர் கூற்று .
ஊன் சோறு என்றால் என்ன? ஏன் பிரியாணியை ஊன் சோறு என்று கூறமுடியாது?!
இறைச்சி கலந்து சமைக்கும் சோறே ஊன்சோறு எனப்படும் . தமிழர் வாழ்வியலில் பிரியாணியானது ஊன் சேர்த்து மட்டும் செய்யும் உணவன்று . காய்கறிகள் மட்டும் சேர்த்துக்கூட பிராயாணி செய்யமுடியும் . அப்படி இருக்கையில் ஊன்சோறு என்பது ஏற்புடைய ஒன்றன்று .
ஏன் ஏற்க முடியாது :
ஒரு இடத்தில் காய்கறியில் செய்யப்பட்ட பிரியாணி பரிமாறப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம் . அதை ஊன் சோறு என்று சொல்வது பொறுத்தமற்றதும் , தவறானதும் என்பதில் ஐயமில.
அப்படியானால் பிரியாணிக்கான தமிழ்சொல் என்ன ?
இதற்கு சரியான விடையில்லை எப்பது எனது கூற்று . ஆனால் இப்படிக்கூறலாம் என்பது எனது விளக்கம் மட்டுமே.
தமிழர் பண்பாட்டு வாழ்வியலோடு கலந்து நிற்கும் பிரியாணி எனும் உணவிற்குச்சிறப்பைக்கொடுப்பது நறுமணச்சுவை கொண்ட கூட்டு மட்டுமே என்பதால் நறுசுவைச்சோறு என்றோ நறுமணச்சுவைச்சோறு என்றோ அழைக்கலாம்.
நன்றி.
வாழ்க தமிழ்.




