இலக்கணம்தமிழ்

வல்லெழுத்து மிகா இடங்கள்

வல்லெழுத்து மிகா இடங்கள்..

வல்லெழுத்து என்றால் என்ன ?
க், ச்,ட், த், ப், ற் என்னும் வலிய ஓசையுடைய எழுத்துகளைத் தொல்காப்பியம் மற்றும் நன்னூல் என்பன வல்லெழுத்துகள் எனப் பகர்கின்றன.

அது, இது, எது என்னும் சொற்களின் பின் வல்லெழுத்து மிகா..
எடுத்துக்காட்டு:
௧ .அது பார்
௨ .இது காண்
௩ .எது செய்தாய்

ஏது, யாது என்னும் சொற்களின் பின் வல்லெழுத்து மிகா.
எடுத்துக் காட்டு:
௧ .ஏது பொருள் ,
௨ .யாது கூறினாய் .

அவை, எவை, இவை, யாவை என்னும் சொற்களின் பின் வல்லெழுத்து மிகா..
எடுத்துக்காட்டு: அவை எங்குள்ளன .
௧ .எவை சிறந்தவை .
௨ .இவை சுவையானவை.
௩ .யாவை வந்தன.

அத்தனை, எத்தனை, இத்தனை என்னும் சொற்களின் பின் வல்லெழுத்து மிகா..
எடுத்துக்காட்டு:
௧ .அத்தனை கையேடுகள் இருந்தன.
௨ . எத்தனை தேர்வுகள் நடந்தன .
௩ .இத்தனை சிறப்பானவை என நான் எண்ணவில்லை.

அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு என்னும் சொற்களின் பின் வல்லெழுத்து மிகா..
எடுத்துக்காட்டு:
௧ .அவ்வளவு தெளிவாய் விளக்கினார்
௨ .எவ்வளவு பெரிய இடம்
௩ .இவ்வளவு கற்க வேண்டும் .

அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின் (இஃது எழுவாய்த்தொடர் ஆகையால் மிகாமலும், குற்றியலுகரச் சுட்டு ஆதலின் மிகுந்தும் வரும்)

எடுத்துக்காட்டு :
௧ .அங்கு செல்லாதே
௨ .இங்கு பார்க்காதே
௩ .எங்கு கற்றாய் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button