படைப்புகள்

பிறர் நலங்கெடா நன்மையேநன்மை; மற்றொன்றும் நன்மையி லடங்கா.

“மானும் குட்டியும்” நிலையுணர்தல் சிறுகதை

பிறர் நலங்கெடா நன்மையேநன்மை; மற்றொன்றும் நன்மையி லடங்கா.

குறிக்கோள் என்பது நாம் எதைச்செய்வதற்கு எண்ணுகின்றோமோ அதற்காக ஓரெல்லைக்கோடிடல் என்பதாகும் . இக்குறிக்கோள் எதைச்சார்ந்தும் இருக்கலாம் . யாருக்கானதாகவும் இருக்கலாம் . இவர்கள்தான் குறிக்கோளோடி ருக்கவேண்டும் இவர்கள் அப்படியிருக்கக்கூடாது என்றொரு வரையறையுமில்லை .அதேநேரத்தில் குறிக்கோளென்ப இப்படித்தா னிருக்கவேண்டும் மெனும்  வரையறையுமில்லை .

நாமொரு குறிக்கோளை வரையறைசெய்துவிட்டோமேயானால் என்ன செய்தால் அவ்வெல்லைக்கோட்டைத்தொடமுடியும் என்ற கேள்வி எல்லார்க்குமெழலாம் . இதுவொன்றும் அத்தனை கடினமானதன்று . மிகமிக எளியவழியில் எங்கள் குறிக்கோளின் எல்லையினை யெட்டிப்பிடித்திடலாம் .

ஒருபணியை நாம் செய்கிறோமாயின் முதலில் பொறுமையாகயிருத்தல் வேண்டும் . அந்தப்பணிக்கான செயற்திட்டங்களை வகைப்படுத்தல் வேண்டும் . அவற்றை நாம்தான் செய்யப்போகின்றோம் . எங்களால் எந்தளவிற்கு அது இயலக்கூடியதென்று தன்னாய்வு செய்துகொள்ளவேண்டும்.  அதன்பின் அந்தவழியில் மெல்லமெல்ல அடியெடுத்துவைத்தல் வேண்டும் . அடுத்தவர் செயற்பாட்டை உன்னிக்கலாம் . ஆனால் தடுத்துநிறுத்த முடியாது . ஆகவே மற்றவரைக்குறிவைக்காமல் எம்மை நிலைப்படுத்த என்னசெய்யலாமென்ற ஆய்வுடன் நகர்தலே சிறப்பானமுறையில் கைகொடுக்கும் . மற்றவரை எம்பணிக்காக பயன்படுத்தாமல் இருக்கவேண்டும் . உண்மையாக நேர்மையாக சரியாக நெறியாக மாண்பாக உழைக்கக்கூடியவராக நாமேயிருத்தல் வேண்டும் .

இங்கொரு சிறந்தவெடுத்துக்காட்டாக சிறிய கதையொன்றைக்காண்போமே .

ஒருகாட்டில் ஒருமான் தன்குட்டியுடன் புல்மேய்ந்துகொண்டிருக்கிறது . இம்மானுக்கு தன்குட்டியை இடர்களிலிருந்து காப்பாற்றவேண்டிய தேவையுண்டு . தன்னைச்சுற்றியென்ன நடக்கிறதென்று பார்த்துப்பார்த்தே அந்தத்தாய்மான் குட்டியுடன்  புற்கள் நிறைந்திருந்த புதருக்கருகில்  வந்துவிட்டது .

அவ்வேளை அம்மான் கண்ணில் ஓரரிமா தென்படுகிறது . தன்னையும் தன்குட்டியையும் வேட்டையாடவே அரிமா அணியமாகயிருப்பதை உணர்கிறது . சரி மறுப்பக்கம் செல்லலாமென்று திரும்பினால் ஒருவேடன் தன்னைக்குறிபார்த்துக்கொண்டுருக்கிறான் என்பதை மான் கண்டுவிடுகிறது . மற்றவழியிற் சென்றுவிடலாமென நினைத்தமானுக்கு மீண்டும் ஏமாற்றம் . காட்டுத்தீயினால் ஒருபக்கம் முழுவதும் புகைமண்டலம் . சரி நான்காம்பக்கம் திரும்புகிறது . அந்தப்பக்கம் மலையருவி வீழ்கின்ற பள்ளத்தாக்கு .

இப்போது மானுக்கு எல்லாமே புரித்துவிட்டது . “ஓ எம்மால் இனித்தப்பிக்க முடியா “ என்று மான் முடிவுசெய்துவிட்டது . தான் போகுமிடமெல்லாம் எதுவுமேயறியாமல் தன்பின்னேவரும் குட்டிக்கு எவ்விடரும் தெரியாது . நான் அச்சப்பட்டு கம்பளையானால் குட்டியும் அவ்வாறேயாகிவிடும் . இருக்கும்வரை குட்டிக்கு அச்சமே வரக்கூடாது என்பதால் தன் இறப்பைத்தெரிந்தபின்னும் அமைதியாக அப்புற்களை மேய்துகொண்டிருக்கிறது.

சடுதியாக இடிமின்னலுடல் மழைபொழிகிறது . காட்டுத்தீ அணைந்துவிட்டது . மானுக்குக்குறிவைத்த வேடுவனின் குறி இடித்த இடியோசையி லிடரி அரிமாவின் மீதுபாய்ந்து அரிமா இறந்துவிடுகிறது .

இறக்கும் போதும் நிறைவோடு இறப்போமென முடிவெடுத்த அடுத்தநொடி இயற்கை முழுவழியையும் திறந்துவிட்டது .

ஒருவேளை மான் செய்வதறியாநிலையில் அலறியிருந்தால்  இப்போது நடந்த இதே நிகழ்வு நிகழந்திட  வாய்ப்பமையாதிருந்திருக்கும். அப்படி வாய்பேயமைந்திருந்தாலும் அதனால் அந்தமான் தன்னைச்சரிசெய்துகொண்டுருக்கலாம் . ஆனால் மான் அச்சத்தால் நிலைகுலைந்து ஏதேனும் செய்திருப்பின் அதன் குட்டிமானும் அச்சம்கொண்டு பதறியிருக்கும் . மான் தன்நிலையைச்சரிசெய்வதைப்போல குட்டிமானால் தன்னைச்சரிசெந்துகொள்ள முடியாது . அந்த மான்குட்டி மிகப்பெரிய மனவழுத்தத்திற்குள்ளாகி தன்திறனிற்பலவற்றை யிழந்திருக்கும் .

இக்கதை பற்பல செய்திகளை வலியுறுத்துகின்றது . இருப்பினும் குறிப்பாக இறக்கும் நேரம் எதுவெனத்தெரிந்தாலும்கூட அமைதியும் பொறுமையும் மற்றவர்மீது புரிதலான அக்கறையும் கொண்டிருந்தால் பேரிடர்கள் கூட இல்லாமற்போய்விடக்கூடும் . இயற்கையே எம்மைப்படைத்தது . அதற்குத்தெரியும் எதையெப்படி எவ்வகையில் நகர்த்தவேண்டுமென்று . எம்மால் முடியாதவொன்றை இயற்கை எமக்காகச்செய்து முடிக்கலாம் . அதற்கு நாம் பொருத்தமானவர்களாக இருக்கிறோமா என்பதே இங்கு பெரியகேள்வியாக வுள.

நாம் செய்யும் எப்பணியானாலும் அப்பணியிலுள்ள இடர்களைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்காமல் தெளிந்த கண்ணோட்டத்தில் நாம் செல்லும் வழிக்கான செயற்பாடுகளை வலுப்படுத்தினால் போதுமானது . அனைத்துக்குறிக்கோளும் நிறைவாகும் என்பதே திண்ணம்.

வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்பர் பலர் . இங்கு உண்மையென்னவெனில் வாழ்க்கை எம்மைவைத்து வாழ்த்துகொண்டிருக்கிறது . வாழ்க்கையை நாங்கள் வாழ்வதும் , வாழ்க்கை எங்களை வாழ்வதற்கும் இடியிலான தூரம் மிகையானது . எதுவெப்படியாயினும் இடியே வந்தெம் தலையிலிறங்கிலும் சூழ்நிலையறிந்து செயற்படத்தவறின் நம்மோடு சேர்த்து நமைச்சுற்றியிருக்கும் நாள்வரை இல்லாமற்செய்துவிடுவோம் .

செயலாற்றல் எமக்கானதென்பதால் நால்வரை வீழ்த்திடா முயற்சியே பயனுய்க்கும் . மற்றவையாவும் நன்செயலில் அடங்கா துன்பங்களே . எமக்குமட்டுமன்றி மற்றோர்க்கும்.

எழுத்து-நிலா

“வாழ்கதமிழ்”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button