படைப்புகள்

“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.

பாவலர்: பெரணமல்லூர் சேகரன்

தாலாட்டு

—–

குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் செண்பகமே

     கவலையின்றிக் கண்ணுறங்கு காலம் மாறுந்தானே

விரிந்து பரந்தது இந்த உலகம்

      எல்லோரும் ஒன்று கூடி வாழத்தானே

சாதிமதம் சொல்லுவதை புறந்தள்ளி ஒத்துமையா

      தோதான மாந்தநேயம் மனதுக்குள் வைத்துறங்கு

மோதி மிதித்துவிடு பொல்லாங்கு செய்வோரை

        நீதி நிலைநாட்ட உறுதியுடன் இயங்கிடுநீ

எல்லா வளங்களுமே நாட்டில் நிறைஞ்சிருக்கு

        சிலர் மட்டும் துய்க்க அல்ல

எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு

       இல்லாத வேற்றுமையை விதைப்பார் ஏற்காதே

வல்லமை பெற்றிடுக நல்லவை நினைத்திடுக

      பொறுப்பும் கடமையுண்டு நீயும் உணர்ந்திடுக

நல்லவை நினைத்திடுக நல்லவை நடந்திடுமே

      நல்வாழ்வு தேடிவரும் நீயும் கண்ணுறங்கு

பெரணமல்லூர் சேகரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button