
….தமிழே எம் முகவரி…….
நல்யாழ் நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
தகைசால் செழுந்தமிழே,
அம் கண் விசும்பின் விளங்கு ஏர் ஞாயிரே_
அவிர் நவிழ்ந்து,
அஞர் நீக்கி,
இயல்
இசை
நாடக
தொடக்க
கவ்வையே,
நின் சேய்களுள்
யானும் ஒருவ னெனில்..
அதே யென் வியல் வாழ்வில் உகந்து,
தன்னேர் இலாத தமிழே!
நீ வாழியவே!
சேயோன்




