படைப்புகள்

“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற நடுவரின் பாக்கள்.

பாவலர் : சுதர்சன் ர

தாலாட்டு
@@@@@@@@@@

மெட்டு( ஆராரோ ஆரிராரோ…… ஆராரோ ஆரிராரோ….)
கண்ணுறக்கம் காணவில்லை.‌‌.. கண்ணான கண்மணியே…./
என்னுறக்கம் தொல்லையடீ…. ஒன்னக்கரை சேர்த்திடவே…./
விண்ணுறங்கும் ஆண்டவரும்… தன்னுறக்கம் கண்டதில்லை…/
மண்ணுறங்கும் இரவினிலே…. மகளே நீயுறங்கு…../
ஊருறங்கும் வேளையிலும் ….. உள்ளத்திலே உன்முகமே…../
நானுறங்க வழியுமுண்டா.‌‌..?! நானான நீவேறா….?!
நாளையொரு நாளுவரும்… நல்லவர்க்கு வாழ்வுதரும்……./
காலையே நடந்திடலாம்….. காலமும் நடத்திடலாம்…./
நம்பியே கண்ணுறங்கு…. நாயகியே கண்மணியே.‌‌…/
தம்பியும் கருவறையில் … துணையாகக் காத்திருக்கான்……/
தாயாக உரியவளாய்… பாத்திரங்கள் தரிக்கையிலே…../
உறக்கமும் உறங்கிடுமே… உனக்கும் புரிந்திடுமே…./
கூடவரும் ஆடவரும் ‌… அவருறங்க வழியில்லையே…../
தாய்நானும் தவிக்கயில…. தாலாட்டுப் பாடயில……/
செல்வமதைத் தேடியவர்….. இல்லம் திரும்பலையே…‌./
ஆகையினால் கண்ணுறங்கு…. ஆடையின்றித் தானுறங்கு/

சுதர்சன் ர

தாலாட்டு @@@@@@@@@@

மெட்டு( ஆராரோ ஆரிராரோ…… ஆராரோ ஆரிராரோ….)

கண்ணுறக்கம் காணவில்லை.‌‌.. கண்ணான கண்மணியே…./ என்னுறக்கம் தொல்லையடீ…. ஒன்னக்கரை சேர்த்திடவே…./ விண்ணுறங்கும் ஆண்டவரும்… தன்னுறக்கம் கண்டதில்லை…/ மண்ணுறங்கும் இரவினிலே…. மகளே நீயுறங்கு…../ ஊருறங்கும் வேளையிலும் ….. உள்ளத்திலே உன்முகமே…../ நானுறங்க வழியுமுண்டா.‌‌..?! நானான நீவேறா….?! நாளையொரு நாளுவரும்… நல்லவர்க்கு வாழ்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button