தமிழ்பிறமொழி/தமிழ்
“இ“ என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

- இகபரசாதனம் – இம்மை மறுமைப்பொருள்.
- இகபசுகம் – இம்மைமறுமையின்பம்.
- இகபரம் – இம்மைமறுமை.
- இகபரம் புத்திரார்த்த பரபோகவிராகம் – இம்மைமறுமைக்குரிய மக்கட்பேறு, பொருள்,துறக்க இன்பம் முதலியவற்றில் வெறுப்பு.
- இகம் – இவ்வுலகம், இவ்விடம், இப்பிறப்பு.
- இகலோகம் – இவ்வுலகம்.
- இகிதம் – இன்பம்.
- இக்கணம் – இப்போது,
- இக்கவம் – கரும்பு.
- இக்கி யந்திரம் – கரும்பாலை.
- இக்கி ரசம் – கருப்பஞ்சாறு.
- இக்கு, இக்ஷு – கரும்பு, தடை.
- இக்குவிகாரம் – சருக்கரை.
- இங்கம் – அறிவு, வியப்பு.
- இங்கரி – கத்தூரி.
- இங்காலம் – கரி.
- இங்கிசை – கொலை, தீங்கு.
- இங்கித கவி – இன்னிசைப்பாட்டு, இன்னிசைப்பாடுவேன்.
- இங்கிதம் – இனிமை, அடையாளம், கருத்து.
- இங்கிதன் – இன்சொல்லன்.
- இங்குலிகம் – இவப்பு, சாதிலிங்கம்.
- இங்குளம்,இங்குளி – பெருங்காயம்.
- இச்சகம் – முகமன்.
- இச்சயம் – அவா.
- இச்சா சத்தி(சித்.) – விழைவாற்றல், வேட்கைவலி.
- இச்சா சேவகம் – விருப்பத்தொண்டு.
- இச்சா நாசம் – அவாவின்மை.
- இச்சா நிவர்த்தி – வேட்கைவிலக்கு.
- இச்சா பத்தியம் – அவாவடக்கம், பொருந்து.
- முணவு, உணவு வரையறை சேர்க்கை விலங்கு .
- இச்சா போகம் – பொருந்து நுகர்வு.
- இச்சாவான் – விருப்பமுடையவன்.
- இச்சித்தல் – விரும்பல், காமுறல்.
- இச்சை – விருப்பம், ௮வா, விழைவு, வேட்கை.
- இஞ்சை – தீங்கு.
- இடங்கம் – உளி.
- இடசாரி – இடச்சுற்று.
- இடபத்துவசன் – விடைக்கொடியோன்.
- இடபம், ரிஷபம் – எருது, காளை, ஏறு, விடை.
- இடப வாகனம் – விடை யூர்தி.
- இடப வாகனன் – விடையேறி.
- இடபா ரூடன் – விடையேறி, சேவேறி.
- இடமலம் – ஊர்க்கலகம்.
- இடமாரம், டமாரம் – பறை.
- இடம்பம், டம்பம் – வீண்பெருமை.
- இடம்பாசாரம் – பெருமிதநடை.
- *இடாப்பு (உ௫து) – பொருட்குறிப்பு.
- இடாம்பீகன், டாம்பீகன் – வீணன்,பெருமைக்காரன்.
- இடிகை – நிலம்.
- இடி த்தம் – மரயானை.
- இடீகை – விரிவுரை, உரை.
- இடையாந்தரம்- நடு.
- இட்சுமூலம் – மூங்கில்.
- இட்டகந்தம், இஷ்டகந்தம் – நறுமணம்.
- இட்டகாமியம்,இஷ்ட காமியம் – விருப்பப்பேறு.
- இட்ட சட்டம், இஷ்ட சட்டம் – தன்விருப்பம்.
- இட்டசித்தி – விருப்பப்பேறு.
- இட்டம்,இஷ்டம் – அன்பு, விருப்பம்.
- இட்ட தேவதை, இஷ்ட தேவதை – குலதெய்வம், வழிபடு தெய்வம்.
- இட்டப் பிரசாதம் – கைம்மாறு வேண்டாக் கொடை.
- இட்டப் பிராப்தி – விருப்பப் பேறு.
- இட்டன், இஷ்டன் – அன்பன், நண்பன்.
- இட்ட போகம்,இஷ்ட போகம் – விரும்பிய நுகர்ச்சி.
- இட்ட வியாத்தி -விரும்பியதைப்பெறுதல்,நெருக்கம், வருத்தம்,
- இட்டளம் – துன்பம்.
- இட்டார்த்தம், இஷ்டார்த்தம் – விரும்பியபொருள்.
- இட்டி, இஷ்டி – வேள்வி, செங்கல்.
- இட்டிகை – இடுக்குவழி.
- இதமித்தல் – ஒரு மித்தல், ஒன்றித்தல்.
- இதமியம் – இன்பம்.
- இதம், ஹிதம் – இனிமை, நன்மை,அன்பு, அறம்.
- இதயம், இதையம், ஹிருதயம் – நெஞ்சம், உள்ளம்.
- இதய பதமம் – நெஞ்சத்தாமரை.
- இதர தேசம் – மறுநாடு, பிறநாடு.
- இதர பதார்த்தம் – வேறு பொருள்.
- இதரம் – வேறு, அயல், அழிவு, பகைமை.
- இதர் யோக வியவச் சேதம் (சித்.) – பிரிநிலை.
- இதரவிதரம் (கரு.)- ஒன்றுக்கொன்று,(நெருக்கடி).
- இதான் – அயலான், கீழ்மகன்.
- இதாகிதம் – நன்மை தீமை, விருப்பு,வெறுப்பு.
- இதி – இப்படி.
- இதிகாசம் – பண்டை வரலாறு,பழங்கதை.
- இதோத்தி – நல்லறிவு.
- இதோபதேசம் – நல்லுரை, அறவுரை.
- இத்தியாதி – இது முதலானவை.
- இந்தம் – புளியமசம், விறகு.
- இந்தரி – இராகு.
- இந்தனம் – விறகு, நறும்புகை.
- இந்தி – அழிஞ்சில்.
- இந்திரகம் – ௮வைக்களம்.
- இந்திரகீலம் – வானவர்கோன் கொடி.
- இந்திர கோபம் – தம்பலப் பூச்சி.
- இந்திர சாபம், இந்திர தனு – வானவில்.
- இந்திர சாலம், இர்தர ஜாலம் – கண்கட்டு மாயம், ஏய்ப்பு, மாயம், எத்து.
- இந்திரசாலி – அழிஞ்சில்.
- இந்திர திசை – கிழக்கு.
- இந்திரநகர் – வானவர் நாடு, துறக்க நாடு.
- இந்திர பதம் – வானுலகு.
- இந்திர பாஷாணம் – வைப்பு நஞ்சு.
- இந்திர புரோ௫தர் – வியாழன்.
- இந்திரப் பிரத்தம் – பாண்டவர் நகர்.
- இந்திரம் – மேன்மை, தலைமை.
- இந்திரயாநி – இந்திராணி.
- இந்திர லோகம் – வானுலகு.
- இந்திரவம் – கருங்குவளை.
- இந்திரவாமம் – நெய்தற்கொடி.
- இந்திரவியாகரணம் – வடமொழி இலக்கணம்.
- *இந்திரவில் – வானவில்.
- இந்திரன் – இமையவர்கோன், வர்னவர் தலைவன்.
- இந்திரா, இந்திரை – திருமகள் .
- இந்திராக்ஷி – மலைமகள்.
- இந்திராணி – வானவர்கோன் மனைவி.
- இந்திரி – கிழக்கு.
- இந்திரிய அறிவு – பொறியறிவு.
- இந்திரியக் காட்சி – பொறியறிவுக் காட்சி.
- இந்திரியங்கள் – ஐம்பொறிகள்.
- இந்திரியத் துவாரம் – பொறிவாயில்.
- இந்திரிய நிக்கிரகம் – பொறியடக்கம்.
- இந்திரிய போகம் – ஐம்புல நுகர்ச்சி.
- இந்திரியப் பிரத்தியட்சம் – ஐம்புலக் காட்சி.
- இந்திரிய வருக்கம் – பொறி வகை.
- இந்திரியாகோசரம் – பொறிகளினால் அறியக்கூடாதது.
- இந்தீவரம் – கருங்குவளை.
- இந்து – நிலா, திங்கள், அம்புலி.
- இந்து கமலம் – வெண்டாமரை.
- இந்து காந்தம் – நிலாமணி, நிலா ஓளி.
- இந்து சேகரன் – திங்களணி முடியன்.
- இந்துமதி – முழு நிலா.
- இந்து ரத்திநம் – முத்து.
- இந்து ரேகை – திங்கட் கலை.
- இந்தோளம் – ஊஞ்சல்.
- இபபாலகன்- யானைப் பாகன்,
- இபம், ஹிபம் – யானை, மரக்கோடு.
- இபாரி – மடங்கல்.
- இபி – பெண்யானை.
- இமகரன், இமகரணன், இமகிரணன் – நிலா, திங்கள்.
- இமகிரி, இமயம், இமையம் – பனிமலை, பொன்மலை.
- இமம்,ஹிமம் – பனிக்கட்டி, உறைபனி,
- இமயவதி, இமயவல்லி – மலைமகள்.
- இமயவில்லி – சிவன்.
- இமவான், ஹிமவான் – மலையாசன்.
- இமாசலம் – பனிமலை.
- இமாசலை – மலைமகள், உமை,
- இமாலயம்,ஹிமாலயம் – பனிமலை.
- இமிசித்தல் – வருத்துதல்.
- இமிசை – கடுக்துன்பம், வருத்தம்.
- இயசமாநன் – தலைவன்.
- இயத்திநம் – முயற்சி.
- இயந்திரம் – பொறி, மறைமொழித்தகடு.
- இயந்திரித்தல் – பொறியாலாட்டுதல்.
- இயமபடர் – மறலி தூதுவர்.
- இயமகிங்கரன் – கூற்றுவன் தூதன்.
- இயமம் – எண்வகைக் தவத்தொன்று.
- இயமன், எமன் – கூற்றுவன், காலன், மறலி .
- இயம லோகம் – கூற்றுவனுலகம்.
- இயம வாகனம் – கூற் றுவனூர்தி, எருமை.
- இயமானன் – வேள்வியாசிரியன், தலைவன்.
- இரகசிய ஸ்தானம் – மறைவிடம்.
- இரகசியம் – மாறைபொருள், மறை, அற்றம்.
- இரகசிய விஷயம் – மறைபொருள்.
- இரகம் – பளிங்கு, பெருமழை.
- இரகிதம், ரஹிதம் – இன்மை, நீக்கம்.
- இரகு வமிசம் – பகலோன் வழி, பகல்மன் வழி.
- இரச்கன் – வண்ணான்.
- இரசகி, ரசிகி – “வண்ணாத்தி.
- இரச குணம் – முக்குணத் தொன்று.
- இரச சுண்டு – கண்ணாடிக்குண்டு.
- இரச குளிகை – ,செம்பைப் பொன்னாக்கு மருந்து.
- இரசநீசலம் – பனி. இரசம், ரசம், – சாறு, மிளகு நீர்.
- இரசவாதம் – பொன்னாக்கல்.
- இரசாபாசம் -அருவருப்பு, ஒழுங்கின்மை.
- இரசாயநன் – கலுழன் (கருடன்).
- இரசாயனம் – பொருளியைபு.
- இரசிகம்,ரசிகம் – இன்பம், குதிசை, யானை,தூர்த்தத்தன்மை.
- இரசிதசுத்தி – ஈயம்.
- இரசிதம், இரசதம் – வெள்ளி, வெண்பொன்,
- இரசிதநாள் – வெள்ளிக்கிழமை.
- இரசித்தல் – சுவைத்தல்.
- இரசேந்திரியம்,இரசநேந்திரியம் – நாக்கு.
- இரசோகரன் – வண்ணான்.
- இரசோபலம் – பலம்.
- இரசோரம் – இருள்.
- இரச்சு, ரஜ்ஜு – கயிறு.
- இரஸ்து (இந்தி) – வாழைப்பழம்.
- இரஞ்சகம் – அன்பு, மகிழ்ச்சி தருவது.
- இரஞ்சகன் – மகிழ்பவன், மகிழ்ச்சி தருபவன்.
- இரஞ்சனம்,இரஞ்சனை – விருப்பங்கொள்ளல், களிக்கச்செய்தல்.
- இரஞ்சிதம், ரஞ்சிதம் – இன்பம், விருப்பம், இனிமை.
- இரட்சகம் – பாதுகாப்பு, மீட்பு.
- இரட்ச கர்த்தா – காவற் கடவுள்.
- இரட்சகன் – காப்பாளன்.
- இரட்சா பக்தனம் – காப்புக்கட்டல்.
- இரட்சிதம் – காக்கப்பட்டது.
- இரட்சதா – காக்கிறவன்,
- இரட்சிதல் – காப்பாற்றல், புரத்தல், ஓம்புதல்.
- இரட்சை – காப்பு.
- இரண களம் – போர்க்களம்.
- இரண சங்கம் – போர்வென்றூதுஞ்சங்கு.
- இரண சிந்நம் – படைக்கலம்.
- இரண தூரியம் – போர்ப்பறை.
- இரண தோரணம் – போரில் வீழ்த்தியபகைவர், தலைமாலை.
- இரண பரீட்சை – அறுவைத்தேர்வு.
- இரண பாதகம்,ரண பாதகம் – கொலைப்பாவம், நம்பிக்கைக் கேடு.
- இரண பாதகன், ரண பாதகள் – கொலையாளி, தீயோன்.
- இரண பேரி, இரண பேரிகை,ரண பேரிகை – போர்ப்பறை.
- இரண மத்தம் – யானை.
- இசணம், ரணம் – புண்.
- இரண ரங்கம் – போர்க்களம்.
- இரண ரணம் – போர்க்காயம், போர்ப்புண்.
- இரண வைத்தியம் – புண்மருத்துவம், அறுவை மருத்துவம்.
- இரண வைத்தியன், ரண வைத்தியன் – அறுவை மருத்துவன், கருவியிட்டாற்றுபவன்.
- இரணாங்கணம் – போர்க்களம்.
- இரணாபியோகம் – படை எழுச்சி.
- இரணிய கருப்பன் – நான்முகன்.
- இரணியகன் – பொன்னுடையவன்,
- இரணிய தானம் – பொன்கொடை, பொன்னீதல்.
- இரணிய நேரம் – மாலை பொழுது.
- இரணியம் – பொன், வெள்ளி, ௮ழியாப் பொருள்.
- இரணியவிந்து – தீ
- இரதகஜ துரக பதாதி – தேர், யானை, குதிரை ,காலாள்.
- இரதம்-தேர், கசஜம்-யானை,
- துரகம் – குதிரை, பதாதி காலாள்.
- இரதகுண்டகன் – தூர்த்தன்.
- இரகசாரதி – தேர்ப்பாகன்.
- இரதசாரி, ரதசாரி – தேரேற்றம்.
- இரதம், ரதம் – தேர்.
- இரத பரீக்ஷ – தேரேற்றப் பயிற்சி.
- இரதபாதம் – தேருருளை.
- இரதாங்கம் – தேருருளை.
- இரதி, ரதி – காமன் மனைவி.
- இரதிகன் – தேரையுடையவன். இரதிகாந்தன்,
- இரதிபதி, இரதி ரமணன் – காமன், வேள்.
- இரதிகிரியை – சேர்க்கை.
- *இரதிக்கிரீடை – காமவிளையாட்டு.
- இரதித்தல் – இன்புறுதல்.
- இரதோற்சவம் – தேர்த்திருவிழா.
- இரத்தக் கட்டு, இரத்த பந்தனம் – குருதிக்கட்டு.
- இரத்தக் கமலம் – செந்தாமரை.
- இரத்தக் கலப்பு – உற்றவுறவு, நெருங்கியெவுறவு.
- இரத்தக் கழிச்சல் – வயிற்றுக்கடுப்பு.
- இரத்த காசம், இரத்த காஸ்ம் – குருதியிருமல்.
- இரத்தக் இராணி, ரத்தக் ராணி – குருதிக்கழிச்சல்,செக்நீர்க்கழிச்சல்.
- இரத்த குமுதம் – செவ்வாம்பல்.
- இரத்த கோகநகம் – செந்தாமரை.
- இரத்த சுத்தி – குருதித் தூய்மை.
- இரத்த தாது – செம்பு.
- இரத்த துண்டம் – கிளி.
- இரத்தாக்கம் – எருமை.
- இரத்தப்பலி, ரத்தப்பலி – உயிர்க்கொலை.
- இரத்தப்பிரவாகம் – குருதிப் பெருக்கு.
- இரத்தப்பிரியன் – கொலை விருப்பன்.
- இரத்தப்பீனிசம் – செந்நீர்ச்சளி.
- இரத்தப்புஷ்டி – குருதி நிறைவு.
- இரத்தம் – குருதி, செந்நீர்.
- இரத்த மாரணம் – காவிக்கல்.
- இரத்தாசயம் -குருதிப்பை.
- இரத்தாட்சி – ஓர்யாண்டு.
- இரத்தாதாரம் – தோல்.
- இரத்தாதி சாரம் – குருதிக்கழிச்சல்.
- இரத்தினம், ரத்தினம் – மாமணி, செம்மணி.
- இரச்தின கசிதம் – மணி யபிழைக்கப்பட்டது.
- இரச்தினச்பை – பொன் அம்பலம்.
- இரச்தினாகாம் – கடல்.
- இரத்தினாபரணம் – மணிக்கலன்.
- இரத்தோற்பலம் – செங்குவளை.
- இரந்திரம் – குழி.
- இரமணம், ரமணம் – இன்புறுஞ்செயல், யாட்டு.
- இரமணன், ரமணன் – கணவன்.
- இரமணீயம் – இன்பஞ்செய்வது, இனியது.
- இரமாபதி – திருமால்.
- இரமாப்பிரியம் – தாமரைப்பூ.
- இரமித்தல் – இன்ப நுகர்தல், மகிழ்தல்.
- இரமை – திருமகள், செல்வம், மனைவி.
- இரம்பம், ரம்பம் – ஈர்வாள்.
- இரவதம் – குயில்.
- இரவி – ஞாயிறு, பகலோன், கதிரோன்.
- இரவி காந்தம் – ஒளிமணி, தாமரை.
- இரவிக்கை (தெலு) – முலைக்கச்சு.
- இரவிவாரம் – ஞாயிற்றுக்கிழமை.
- இரவை – அணு, சயக்குண்டு, சிறிய அளவு.
- இராகம், ராகம் – இசை, பண், அவா, விருப்பு.
- இராக விராகம் – விருப்பு வெறுப்பு.
- இராகு – கருங்கோள்.
- இராகு காலம் -தீயவேளை.
- இராக்கதம் – வலிந்த மணம்.
- இராக்கதர் – அரக்கர்.
- இராக்கிநி – அரசன் மனைவி.
- இராச கருமம், இராசகாரியம் – அரசியல் வினை.
- இராச கிருஹம் – அரண்மனை.
- இராச குமாரன் – கோமகன்.
- இராச சங்கம், ராஜ சங்கம்,இராச சபை – அரசவை.
- இராஜ சயனம் – அரசர்படுக்கை.
- இராஜ சன்னம் – அரக்குறி, ௮ரசஅடையாளம்.
- இராஜ ஸ்ரீ ,ராஜ ஸ்ரீ – திரு.
- இராச சூயம் – அரசர் வேள்வி.
- இராஜ சேவை – ௮ரசபணி, அரசிய ற்பணி.
- இராஜா – அரையன், மன்னன், அரசன்.
- இராச ஸ்திரீ, ராஜ ஸ்திரீ – அரசி.
- இராச தண்டம் – அரச ஒறுப்பு.
- இராசதம் – மனவெழுச்சி, எழுச்சி.
- இராஜ தரிசனம்,ராஜ தரிசனம் – அரசற்காணல்.
- இராச தாலம் – கழுகு.
- இராசதானி, ராஜதானி – அரசர் தலைநகர்.
- இராச திருஷ்டி – அரசர் கண்ணேறு.
- இராச துரோகம், ராஜ துரோகம் – அரசியன் மாறுகோள், அரசியற்படுகை.
- இராச துரோகி, ராஜ துரோகி – கோன்கேடு சூழ்வோன்.
- இராஜத்தவம் – அரச இயல்பு.
- இராசநிட்டூரம் – கொடுங்கோன்மை.
- இராச நீதி – செங்கோன்மை
- இராச பதவி – ௮ரசநிலை.
- இராச பத்தினி – அரசன் மனைவி.
- இராசபம் – கழுதை.
- இராச பாட்டை – பெரும்பாட்டை, பெருவழி.
- இராஜப் பிரதிநிதி – அரசியற்றலைவன், காவலன்.
- இராஜ புத்திரன் – கோமகன், அரசகுமாரன்.
- இராச போகம் – பெரு நுகர்ச்சி.
- இராச ம௫மை – இறைமாட்சி, அரசப்பண்பு.
- இராச மானியம் – இறையிலி.
- இராஜ யோகம், இராச யோகம் – முடிந்ததவம், அரசியற்றவம்.
- இராசயோகாப்பி யாலம் – ௮ரசியற்றவமுறை.
- இராச ராசன், இராஜ ராஜன் – அரசர்க்கரசன், மன்னர் மன்ணன், பேரரசன்.
- இராஜராஜேஸ்வரி – இறைவி, அரசர்க்கரசி.
- இராசலட்சமி – திருமகள்.
- இராச வசியம், இராச வசீகரம் – அரசனைத்தன்வழியாக்கல்,காவலற் கவர்ச்சி.
- இராச வர்க்கம் – அரசமரபு, அரச குலம்.
- இராச வாகனம் – சிவிகை, அரச ஊர்தி.
- இராச விட்டூரம் – கொடுங்கோல்
- இராச விருட்சம் – கொன்றை மரம்.
- இராசாக் கினை – அரசியற்கட்டளை, ௮ரச ஆணை.
- இராசாங்கம்,ராஜாங்கம் – அரசாட்சி, ௮ரசியலுறுப்பு.
- இராசாசனம் – அரியணை.
- இராசாதிகாரம் – அரசியற்றலைமை
- இராசாதிகாரி, இராசாதிபதி – ௮ரசியற்றலைவன்.
- இராசாளி – வல்லூறு.
- இராசி – ஓரை, ஓழுங்கு, குவியல், கூட்டம், இணக்கம், வான் வீடு,
- இராசக்காரன் – நற்கோளமைந்தோன்.
- இராசி சக்கரம் – விண்மீன்வட்டம், ஒரை.
- இராசிநாமா (உருது) – வேலையொழிப்பு.
- இராசீகம் – ௮ரசமுறை, அரசனால் வருவது.
- இராசீரகம் – அரசாட்டிக்குரியது.
- இராசோபசாரம் – நல்வரவேற்பு.
- இராச்சிய பரிபாலனம் – ௮ரசாட்சி.
- இராச்சிய பாரம் – அரசியற் பொறுப்பு.
- இராச்சியம் – அரசியல், நாடு.
- இராச்சியாபிஷேகம் – ௮ரசுரிமைக் திருமுழுக்கு.
- இராட்சசம் – வலித்த மணம்.
- இராட்சசன் – அரக்கன்.
- இராட்டினம் – நூல் நூற்குங் கருவி.
- இராணம் – மயிற்றோகை,
- இராணி – ௮ரசி.
- இராணி வாசம் – உவளகம், அரசியில்லம்.
- இராணுவம் – போர்ப்படை.
- இராதரங்கம் – கலப்பை.
- இராத்திரி – இரவு, கலங்குல்.
- இராத்திரிகாசம் – வெண்டாமரைப்பூ.
- இராயசம் – எழுத்து வேலை.
- இராயசன் – எழுத்தாளன்.
- இராயன் – அரசன்.
- இருசால் – இறைப்பணம், திறை
- இருசால்நாமா – இறைப்பட்டி.
- இருசி – பூப்பில் பெண்.
- இருசு, ருசு – நேர்மை, செம்மை, மெய், மனம்.
- இருஷபம்.இருடபம் – காளை, எருது, விடை.
- இருஷி, இருடி – முனிவன், தவசி, துறவி.
- இருஷிகேசன் ரிஷகேசன் – திருமால்.
- இருஷி பத்தினி , ரிஷி பத்தினி – முனிவன் மனைவி.
- இருஷி பிண்டம் – முனிவர்படைப்பு.
- இருண பாதகன் – கடன் கொடாத்தீயோன்.
- இருணம் – கடன்.
- இருதய கமலம் – நெஞ்சச்காமரை.
- இருதயம், இதயம் – நெஞ்சம், உள்ளம், அன்பு.
- இருது, ருது – பருவம், மகளிர் முதற்பூப்பு.
- *இருதுகாலம் – பூப்புக்காலம், பருவகாலம்.
- இருதுக்கள், ருத்விக் – வேள்வியாசிரியன்.
- இருசாந்தி, ருது சாந்தி – பூப்புக்கழிப்பு.
- இருது மங்கல ஸ்நானம் – பூப்பு நன்னீராட்டு.
- இருதுராசம் – வேனிற்காலம்.
- இருவிருத்தி, ருது விருத்தி – பருவவளர்ச்சி.
- இருதோத்தி – உண்மைபேசல்.
- *இருப்புச் சலாகை – இருப்புக்கோல்.
- இரேகம் – உடல், யாக்கை, அச்சம்,தவை, ஐயம்.
- இரேகை – வரி, எழுத்து, கையிறை,நிறை, தொடர்.
- இரேக்கு, ரேக்கு – பொற்றாள், பொற்றகடு,காக்காப்பொன்.
- இரேசகம் – வெளிவிடுதல்.
- இரேசகம் – குறைத்தல்.
- இரேசன் – அரசன், திருமால்.
- இரேணு – அணு, துகள், அழகு, பூந்தாது.
- இரேணுகாம்பாள் – இறைவி, ௮ழகி.
- இரேதசு – வெண்ணீர்.
- இரௌத்தம், (இந்து) – குதிரைப்பணிவிடை.
- இரௌத்தர் (இந்து.) இரௌத்திரம் – குதிரைச் சேவகர்.
- இலகான், லகான் – கடிவாளம்.
- இலகி – எழுத்து.
- இலகிதம் – கடிதம், திருமுகம், மூடங்கல்.
- இலகிமா – நொய்மை (எண்பேறுகளில் ஒன்று)
- இலகிரி,லகரி,லாகிரி – வெறி, மயக்கம்.
- இலகு, லகு – எளிது, நொய்மை, நுண்மை.
- இலகுசம் – ஈரப் பலாமரம்.
- இலக்கம் ,இலட்சம் ,லஷம் – எண், .நூறாயிரம்.
- இலக்கிநம் – வேளை.
- இலக்குமி ,லக்ஷிமி – திருமகள், அழகு, செல்வம்.
- இலங்கணம் – பட்டினி.
- இலங்கர் (இந்து.) – நங்கூரம்.
- இலங்கோடு, லங்கோடு – கீழமுடை, கோவணம்.
- இலச்சை,லச்சை – இழிவு, கூச்சம், வெட்கம்.
- இலஞ்சம் – கைக்கூலி, கையுறை,
- இலட்சணம், லட்சணம் – அழகு, பார்வை.
- இலட்சணை – குறிப்பு.
- இலட்சாதிபதி – பெருஞ்செல்வன்.
- இலட்சியம், லட்சியம் – குறிக்கோள், குறி.
- இலட்டன் – நீசன்.
- இலட்டு, லட்டு – பொரிவிளங்காய், பொரிமாத்திரளை.
- இலண்டம்,இலத்தி – யானை மலம், குதிரை மலம்,கழுதை மலம்.
- இலண்டன், லண்டன் – முருடன்.
- இலண்டு, லண்டு – முருட்டுத்தன்மை, முரடு.
- இலபி, லபி – பேறு, ஊழ், தலை எழுத்து.
- இலபிகம் – ஊழ், பேறு.
- இலபித்தல் – வாய்த்தல், கைகூடுதல்.
- இலம்பநம் – கீழே தூங்குதல்.
- இலம்போதரன், லம்போரரன் – பிள்ளாயார், பெருவயிறன்.
- இலயஞானம், லயஞானம் – முற்றறிவு, மெய்யறிவு.
- இலயஸ்தகானம், லயஸ்கானம் – ஒடுங்குமிடம்.
- இலயக்துவம் – ஒடுங்குந்தன்மை.
- இலயம், லபம் – ஒடுக்கம், அழிவு.
- இலயித்தல் – ஒடுங்குதல், சேர்ந்தொன்றித்தல் (சித்).
- இலலாடம்,இலலாடகம் – நெற்றி, வரை.
- இலலிதம், லலிதம் – அழகு, மகளிர் விளையாட்டு.
- இலவங்க பத்திரி – கிராம்பின் இலை
- இலவசம் – விலையின்மை.
- இலவணம், லவணம் – உப்பு.
- இலவுகீகம், இலவுகிகம், இலெளகீகம் – உலகியல், உலகப்போக்கு.
- இலாகரி, இலாரி – களியாட்டு, வெறி.
- இலாகவம் – எளிமை.
- இலாகா, லாகா (அரபி) – ஆட்சி எல்லை.
- இலாங்கூலி – குரங்கு.
- இலாசடி, இலாசடை – தொல்லை, துன்பம்.
- இலாஞ்சனம், இலாஞ்சனை – புகழ், அடையாளம், கறை.
- இலாடம், லாடம் – காற்பரளை.
- இலாபருஷ்டம் – கூடுதல்குறைதல், ஊதியமும், பொருட்கேடும்.
- இலாபம், லாபம் – ஊதியம், மிச்சம், பேறு.
- இலாயம், லாயம் – குதிரைப்பந்தி.
- இலாலி, லாலி – வாழ்த்துப்பாட்டு.
- இலாவணியம், லாவணியபம் – பேரழகு.
- இலாவாதேவி, இலேவாதேவி – கொடுக்கல் வாங்கல், பண்ட மாற்று.
- இலிகிதம் – முடங்கல், திருமுகம்.
- இலிகிதன் – எழுத்தாளன்.
- இலிங்கம் – குறி, அடையாளம்.
- இலிங்காங்கம் – ஆணுறுப்பு.
- இலிங்கி – நுண்ணுடலன்.
- இலிங்கோத்தாரணம் – (சிவக்) குறி நிறுவல்.
- இலீநம் – உருகினது.
- இலீலா, லீலா – காம விளையாட்டு.
- இலிலாவதி – அழகிய பெண்.
- இலீலை, லீலை – விளையாட்டு.
- இலேகம், லேகனம் – எழுத்து கடிதம்.
- இலேகரி, இலேகிரி – எழுத்தாணி.
- இலேகியம் – பாகுமருந்து, இளகம்.
- இலேகை – எழுத்து, ஓவியம், வரி.
- இலேசம், இலேசு – நொய்மை, சிறிது, எளிது.
- இலேஞ்சு – மேலாடை.
- இலேபனம் – சந்தனம்.
- இலேலிகம் – பாம்பு.
- இலெளகீகதருமம் – உலகியல் நெறி, உலகிய லொழுக்கம், அறநெறி,௮றவொழுக்கம்.
- இலெளகீகம் – உலகியல்.
- இளம்பிராயம் – இளமைக்காலம்.



