இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௮௰௬. இகல் (மாறுபடல்).

குறள் – ௮௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு).

“இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கு நோய்.”

இகல் = மாறுபடல், வேறுபடல்.
பகல் = பிரிதல்.
பண்பின்மை = தீக்குணம். நெறியின்மை.
பாரிக்கும் = வளர்க்கும்.
நோய் = நலக்கேடு.

“எல்லாவுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மைபாரிக்கும் நோய் இகலென்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

பொருள் — “எல்லாவுயிர்க்கும் பிரிதலென்னும் தீக்குணத்தை வளர்க்கும் நோய் மாறுபடல் எனப்படும்.”

‘இகலென்ப’ ‌என்பதன்கண் வந்த ‘என்ப’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘பாரிக்கும் நோய்’ என்பது செய்யுமென்னும் வாய்ப்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“இகலென்ப எல்லா வுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.”

 

குறள் – ௮௱௫௰௨ (அச்சில் உள்ளவாறு).

“இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கு நோய்.”

இகல் = மாறுபடல், வேறுபடல்.
பகல் = பிரிதல்.
பண்பின்மை = தீக்குணம். நெறியின்மை.
பாரிக்கும் = வளர்க்கும்.
நோய் = நலக்கேடு.

“எல்லாவுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மைபாரிக்கும் நோய் இகலென்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

பொருள் — “எல்லாவுயிர்க்கும் பிரிதலென்னும் தீக்குணத்தை வளர்க்கும் நோய் மாறுபடல் எனப்படும்.”

‘இகலென்ப’ ‌என்பதன்கண் வந்த ‘என்ப’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘பாரிக்கும் நோய்’ என்பது செய்யுமென்னும் வாய்ப்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“இகலென்ப எல்லா வுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.”

 

குறள் – ௮௱௫௰௩ (அச்சில் உள்ளவாறு).

“பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி
யின்னாசெய் யாமை தலை.”

பகல் = பிரிதல்.
பற்றா = வெறுப்பன.
செயினும் = செய்தாலும்.
இகல் = மாறுபடல்.
இன்னா = தீங்கு.
தலை = சிறந்தது, உயர்ந்தது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“பிரிதலைக்கருதி ‌வெறுப்பன செய்தாலும் மாறுபடலைக்கருதி தீங்குசெய்யாமை சிறந்தது” என்பதாம்.

‘கருதி’ என்னும் வினையெச்சம் ‘பற்றா (வெறுப்பன)’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘செயினும்’ என்னும் வினையெச்சம் ‘இகல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கருதி’ என்னும் வினையெச்சம் ‘இன்னா’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“பகல்கருதி பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.”

 

குறள் – ௮௱௫௰௪ (அச்சில் உள்ளவாறு).

“இகலென்னு மெவ்வநோய் நீக்கிற் றவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்.”

இகல் = மாறுபடல்.
எவ்வநோய் = தீராநோய், நீங்கா நோய்.
தவல் = குறைவு, இறப்பு.
தாவில் → தாழ்வில் = குன்றாத.
விளக்கம் = புகழ்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“மாறுபடலென்னும் தீராநோயை நீக்கின் அச்செயல் இறப்பில்லா குன்றாத புகழைத்தரும்” என்பதாம்.

‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘இகல்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நீக்கின்’ என்னும் வினையெச்சம் ‘குறைவு’ என்னும் பொருள்தரும் ‘தவல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்.”

 

குறள் – ௮௱௫௰௫ (அச்சில் உள்ளவாறு).

“இகலென்னு மெவ்வநோய் நீக்கிற் றவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்.”

இகல் = மாறுபடல்.
எவ்வநோய் = தீராநோய், நீங்கா நோய்.
தவல் = குறைவு, இறப்பு.
தாவில் → தாழ்வில் = குன்றாத.
விளக்கம் = புகழ்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“மாறுபடலென்னும் தீராநோயை நீக்கின் அச்செயல் இறப்பில்லா குன்றாத புகழைத்தரும்” என்பதாம்.

‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘இகல்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நீக்கின்’ என்னும் வினையெச்சம் ‘குறைவு’ என்னும் பொருள்தரும் ‘தவல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்.”

குறள் – ௮௱௫௰௬ (அச்சில் உள்ளவாறு).

“இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலு நணித்து.”

இகல் = மாறுபடல்.
மிகல் = மிகுதல்.
இனிது = நன்மையானது.
தவலும் = தாழ்தலும்.
கெடலும் = அழிதலும்.
நணித்து = விரைந்து.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“மாறுபடலில் மிகுதல் தனக்கு நன்மைதருமென்பவனது வாழ்க்கை விரைந்து தாழ்தற்கும் அழிதற்கும் உரியது” என்பதாம்.

‘மிகல்’ என்னும் தொழிற்பெயர் இகலின் என்னுஞ்சொல்லைத்தழுவி பொருளைச்சிறப்பிக்கும். ‘இகலின் மிகல்’ என்பது உணர்ச்சியைத்தரும்.

எண்ணும்மைகள் பொருள்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது. இறுதிவும்மையான “கெடலும்” என்பது புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“இகலின் மிகல்இனி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.”

 

குறள் – ௮௱௫௰௭ (அச்சில் உள்ளவாறு).

“மிகன்மேவல் மெய்ப்பொருள் காணா ரிகன்மேவ
லின்னா வறிவி னவர்.”

இகன் → இகல் = மாறுபடல்.
மேவல் = விரும்பல்.
இன்னா = தீங்கான.
மிகன் → மிகல் = மிகு எதிர்வினையாற்றல்.
மேவல் = விரும்புதல்.
மெய்ப்பொருள் = உண்மைப்பொருள்.
காணார் = அறியார்.

“இகன்மேவல் இன்னா அறிவினார் மிகன்மேவல் மெய்ப்பொருள்காணார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மாறுபடலை விரும்பும் தீய அறிவினர் மிகு எதிர்வினையாற்றலை விரும்பலால் உண்மைப்பொருளை அறியார்” என்பதாம்.

‘காணார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘மேவலின்னா வறிவினவர்’ என்பது ‘மேவும் இன்னா அறிவினவர்’ எனவிரியும் செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். ‘இன்னா அறிவினவர்’ என்பது அடைபெற்ற பெயர்ச்சொல். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘இன்னாவறிவினர்’ என்னும் புணர்ச்சியைப்பிரிக்காது ‘அறிவினர்’ எனவுணரமுடியாது. புணர்ச்சியைப்பிரித்து பொருளறிவதாயின் புணர்த்த வேண்டா.

செம்மைவடிவம் —
“மிகன்மேவல் மெய்ப்பொருள் காணார் இகன்மேவல்
இன்னா அறிவி னவர்.”

 

குறள் – ௮௱௫௰௮ (அச்சில் உள்ளவாறு).

“இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை
மிகலுக்கி னூக்குமாங் கேடு.”

இகல் = மாறுபடல்.
எதிர்சாய்தல் = கைவிடுதல்.
மிகல் = மிகுதி.
ஊக்கின் = தூண்டின்.
ஊக்கும் = முனையும், விரையும்.
ஆம் = ஆகும்.

“இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம். அதனை (இகலினை) மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மாறுபடலைக்கைவிடல் ஆக்கந்தரும். மாறுபடலை மிகுதியும் செய்யின் கேடு முனைந்து வரும்” என்பதாம்.

‘ஆக்கம்’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகிறது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

கொண்டுகூட்டில் ‘கேடு ஊக்குமாம்’ எனக்கூடி பொருள்தரும்.‌ புணர்த்தியபின் புணர்ச்சியை நீக்கி வேறோரிடத்திற்கு கொண்டுசெல்வதானால் புணர்த்த வேண்டா.

செம்மைவடிவம் —
“இகலிற் கெதிர்சாய்த லாக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.”

 

குறள் – ௮௱௫௰௯ (அச்சில் உள்ளவாறு).

“இகல்காணா னாக்கம் வருங்கா லதனை
மிகல்காணுங் கேடு தரற்கு.”

இகல் = மாறுபடல்.
காணான் = கருதான்.
ஆக்கம் = மேன்மை, நன்மை.‌
வருங்கால் = வரும்போது.
அதனை = இகலினை.
மிகல் = மிகுதி.
காணும் = கருதும்.
தரற்கு = அடைதற்கு, உறுதற்கு.

“ஆக்கம் வருங்கால் இகல்காணான். கேடுதரற்கு அதனை மிகல்காணும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நன்மை வரும்போது மாறுபடலைக்கருதான். கேட்டினை உறுதற்கு இகலினை மிகுதியும் கருதுவான்” என்பதாம்.

‘காணான்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

’வருங்கால்’ என்னும் நிகழ்வுசுட்டு ‘அதன்’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது.

‘காணும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இகல்காணா னான்ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.”

 

குறள் – ௮௱௬௰ (அச்சில் உள்ளவாறு).

“இகலானா மின்னாத வெல்லா நகலானா
நன்னய மென்னுஞ் செருக்கு.”

இகல் = மாறுபடல்.
இன்னாத = தீய.
ஆம் = ஆகும்.
நகல் = நட்பு.
நன்னயம் = நல்லின்பம்.
செருக்கு = செல்வம்.

“இன்னாதவெல்லாம் இகலானாம். நன்னயமென்னும் செருக்கு நகலானாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“தீயவையெல்லாம் மாறுபடலால் உண்டாகும். நல்லின்பமென்னும் செல்வம் நட்பினால் உண்டாகும்” என்பதாம்.

‘இகலானாம்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

‘நகலானாம்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘நன்னயம்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“இகலானாம் இன்னாத வெல்லாம் நகலானாம்
நன்னய மென்னும் செருக்கு.”

தொகுத்தெழுதவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button