
துளி வாழ்த்துப்பா
துளி வானொலி எனும் கலங்கரை விளக்கால், பார் போற்றும் தமிழதனை வையத்துள் வாழுகின்ற அன்பு நிறை மாந்தற்கு , நடுநிலையில் நின்று , ஒளி நிறை விளக்கதனை , எண்ணற்ற திசைகளுக்கு தமிழெனும் வெளிச்சத்தை , தமிழ் மாந்தர் கண்ணது கூசாமல் திறந்திடவே , செந்தமிழான பொன் தமிழை திறம்படத் தந்தருளும் துளிவானொலியே வாழ்க வாழ்க பல்லாண்டு!!!
துளியுறவுகளுக்கான வாழ்த்துப்பா
நற்றமிழால் தூய தமிழ் மொழிந்து.. நயம்படத்தேன் தமிழ்ச்சொல்லால் புனைந்து , வடமொழிச் சொல் களைந்து ,செந்தமிழ் மாந்தர்கள் வியப்புடன் பார்வையிட அழகான தமிழனை தந்துதவும் துளி வானொலி உறவுகள் அனைவருக்கும் இனிய இன்நேர நற்றமிழ் வாழ்த்து உரித்தாகட்டும்..! வாழ்க! வளம்பெறுக நிறைவோடு !
பவி




