“தமிழீழவைப்பகம்”
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்காமாண்டு விடைத்திங்கள் இருபத்துமூன்றாம்நாள் தமிழீழவைப்பகம் தமிழீழத்தில் தொடங்கப்பட்டது .
முப்பத்தொரு ஆண்டுகளைத்தொட்டுநிற்கும் இவ்வைப்பகமானது தமிழீழத்தேயத்தலைவர் மேதகு பிரபாகரனால் தொடங்கப்பட்ட தமிழர்களுக்கான காப்பகமாகவும், தமிழீழமக்களின் இருப்பைக்கட்டியெழுப்புவதற்கான ஒரு மாபெருங்கடமையாகவும் பார்க்கப்பட்டது .
தமிழீழவைப்பகத்தின் பன்னிரண்டுகிளைகளில் நான்குகிளைகள் கணணிசார் வைப்பகங்களாக்கப்பட்டிருந்தன.
எந்தவொரு மறைகாணிகளோ , காவலர்களோ இன்றி படித்தஇளையர்களைப்பணியமர்த்தி இலங்கையிலேயே மிகவும் பாதுகாப்பான வைப்பகமென்ற பெயரைப்பெற்றுக்கொண்டு திறம்படச்செயற்பட்டது . இந்தப்பணிக்கு தமிழீழவிடுதலைப்புலிப்போராளிகளை பயன்படுத்துவதுமில்லை. இப்பணிகளுக்கு படித்த பட்டதாரி இளைஞர்களையே அமர்த்தியிருந்தனர் . கந்தையா பாலகிருட்டிணன் அவர்களே இதன் மேலாளராக இருந்தார் .
தமிழீழவைப்பகம் மட்டுமன்று தமிழீழமும் ஓருநாள் புத்துயிர்பெறும் . அன்று மீண்டும் பழையதமிழீழம் அப்படியே கண்முன்தோன்றி மக்களுக்கான நிலையான நிறைவான வாழ்வைப்பெற்றுக்கொடுக்கும் .

“தமிழீழவைப்பகத்தின் செயற்றிட்டங்கள்”
தமிழீழவைப்பகத்தின் கிளைகள்.
கிளைகள் தொடங்கப்பட்டநாள்.
யாழ்ப்பாணம் ௨௩-௫-௲௯௲௯௪
கிளிநொச்சி ௬-௫-௲௯௲௯௫
நெல்லியடி ௰௪-௯-௲௯௲௯௫
முல்லைத்தீவு ௰௪-௫-௲௯௲௯௬
ஊரகக்கிளைகள் தொடங்கப்பட்டநாள்.
மாங்குளம் ௭-௭-௲௯௲௯௭
விசுவமடு ௧-௬-௨௲௧
புளியங்குளம் ௨௪-௭- ௨௲௨
பளை ௰௪-௩-௨௲௩
முழங்காவில் ௰௪-௧-௨௲௪
தமிழீழவைப்பகத்தின் கிளைகள்.
கிளைகள் தொடங்கப்பட்டநாள்.
யாழ்ப்பாணம் ௨௩-௫-௲௯௲௯௪
கிளிநொச்சி ௬-௫-௲௯௲௯௫
நெல்லியடி ௰௪-௯-௲௯௲௯௫
முல்லைத்தீவு ௰௪-௫-௲௯௲௯௬
ஊரகக்கிளைகள் தொடங்கப்பட்டநாள்.
மாங்குளம் ௭-௭-௲௯௲௯௭
விசுவமடு ௧-௬-௨௲௧
புளியங்குளம் ௨௪-௭- ௨௲௨
பளை ௰௪-௩-௨௲௩
முழங்காவில் ௰௪-௧-௨௲௪
வைப்பகப்பணிகள்.
நிலையான வைப்புகள் =Fixed Deposits
தேட்டவைப்புகள் =Savings Deposits
நடைமுறைக்கணக்குகள் =Current Accounts
தேட்டச்சான்றிதழ்கள் =Savings Certificates
ஏழுநாள் அழைப்புவைப்புகள் =Seven Days call Deposits
வெளிநாட்டு நாணயமாற்று= Foreign Currency Exchange
கடன்கள் =Loans
கூடியவரைவுகள் =Overdrafts
நகையடைவு= Pawn Broking
காசோலைக்கொள்வனவு =Cheque Purchase Facilities
வாடகைக்கொள்வனவு =Hire Purchase
நிலையானகட்டளைகள் =Standing Orders
பொதிப்பாதுகாப்புப்பணி =Packet Custody Service
நிலையான வைப்புத்திட்டங்கள்=Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டிவிழுக்காடு
இருபத்துநான்குதிங்கள் நிலையானவைப்பு ௦௮.௫௦ %
பன்னிரண்டுதிங்கள் நிலையானவைப்பு ௦௮.௦௦%
ஆறுதிங்கள் நிலையானவைப்பு ௦௭.௦௦%
மூன்றுதிங்கள் நிலையானவைப்பு ௦௬.௦௦ %
இருபத்துநான்குதிங்கள் நிலையானவைப்பு (திங்கள் வட்டி) ௦௮.௦௦ %
பன்னிரண்டுதிங்கள் நிலையானவைப்பு (திங்கள் வட்டி) ௦௭.௫௦ %
வெளிநாட்டு நிலையானவைப்புத்திட்டங்கள்=
Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டிவிழுக்காடு
இருபத்துநான்குதிங்கள் நிலையானவைப்பு ௦௭.௫௦ %
பன்னிரண்டுதிங்கள் நிலையானவைப்பு ௦௭.௦௦%
இருபத்துநான்குதிங்கள் நிலையானவைப்பு (திங்கள் வட்டி) ௦௭.௫௦ %
பன்னிரண்டுதிங்கள் நிலையானவைப்பு (திங்கள் வட்டி) ௦௭.௦௦ %
தாயகவொளி வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்=THAYAKAOLI Non-Resident Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டிவிழுக்காடு
இருபத்துநான்குதிங்கள் நிலையானவைப்பு ௦௭.௦௦ %
பன்னிரண்டுதிங்கள் நிலையானவைப்பு ௦௭.௦௦ %
இருபத்துநான்குதிங்கள் நிலையானவைப்பு (திங்கள் வட்டி)௦௭.௦௦ %
பன்னிரண்டுதிங்கள் நிலையானவைப்பு (திங்கள் வட்டி)௦௭.௦௦ %
தேட்ட வைப்புத்திட்டங்கள்=Savings Deposit Schemes
தேட்ட வைப்புத்திட்டங்கள் வட்டிவிழுக்காடு
வளர்ந்தோர் தேட்டவைப்புத்திட்டம் ௦௬.௦௦%
சிறுவர் தேட்டவைப்புத்திட்டம் ௦௬.௦௦%
நல்லைத்தேட்டம் ௦௬.௦௦%
நல்லைச்சிறுவர்தேட்டம் ௦௬.௫௦%
சிறார் உண்டியற்றிட்டம் ௦௬.௫௦%
ஊற்றுக்கண் பெண்கள் தேட்டவைப்புத்திட்டம் ௦௬.௦௦%
அமுதம் சிறார்தேட்டம் ௦௬.௫௦%
பணியாளர்காப்பு நயநிதித்திட்டம் ௦௬.௫௦%
கடன்திட்டங்கள்=Loan Schemes
கடன்திட்டங்கள் வட்டிவிழுக்காடு
நகையடைவுக்கடன்திட்டம் ௰௮.௦௦%
வாணிபக்கடன்திட்டம் ௰௬.௦௦%
மேம்பாட்டுக்கடன்திட்டம்
வேளாண்மைக்கடன்திட்டம் ௰௫.௦௦%
கடற்றொழில் கடன்திட்டம் ௰௫.௦௦%
கைத்தொழில் கடன்திட்டம் ௰௫.௦௦%
சுழற்சி முறையிலான வாணிபக்கடன்திட்டம் ௨௩.௦௦%
தற்றொழில் முயற்சிக்கடன்திட்டம் ௰௪.௦௦%
கதிரொளி மின்னாக்கித்தொகுதிக்கடன் திட்டம் ௰௭.௦௦%
நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் . நாட்டின் அடிமை விலங்குதெறிக்கும் .
நன்றி .
வாழ்க தமிழ் .