
“ய”சங்கதம்/ தமிழ்
யக்கிய சாலை, யாக சாலை -வேள்விச் சாலை.
யக்கியோப வீதம், யக்ஞோப வீதம்-பூணூல், பூணூற் சடங்கு.
யக்யம்,யஞ்ஞம் -வேள்வி.
யசஸ் -புகழ் .
யாசமானவன்-தலைவன், வேட்பிப்போன்.
யட்சணி -பெண் பேய்.
யதார்த்தம்-மெய், உண்மை.
யதாவிருத்தம் -நடந்தவாறு, உண்மை வரலாறு.
யதி- துறவி.
யதேச்சை -விருப்பம், இயற்கை.
யதேஷ்டம் -மிகுதி.
யத்தனம் -முயற்சி.
யத்துருச்சை -தற்செயல்.
யவட்சாரம் -வெடியுப்பு.
“யா”சங்கதம்/ தமிழ்
யாககருமம் -வேள்விச்சடங்கு.
யாகபசு -வேள்விக்குரிய ஆ.
யாதவன் /இடையன்.
யாகம் -வேள்வி.
யாத்ரா, யாத்திரை -வழிச்செலவு, வழிப்பயணம், ஊர்ப்பயணம்.
யாசகம் -இரப்பு.
யுகம் -ஊழி.
யுகளம் -இரட்டை.
யுகாந்தகாலாக்னி-ஊழித்தீ.
யுகாந்தம் -உலகமுடிவு,ஊழிமுடிவு.
யுக்தம்-தகுதி.
யுத்தகளம்-போர்முனை, அமர்க்களம்.
யுத்தம் -போர், அமர், சண்டை.
யுத்தி,யுக்தி-சூழ்ச்சி, பொருந்துமாறு.
யுவம்-இளமை
யுவராசன்-இளவரசன்.
“யூ”சங்கதம்/ தமிழ்
யூகம்-நுண்ணறிவு, சூழ்ச்சி, கருங் குரங்கு.
யூகவான் -நுட்ப அறிவினன்.
யூகித்தல் -நினைத்துப்பார்த்தல், ஓர்தல்.
“யோ”சங்கதம்/ தமிழ்
யோகச்சேமம், யோகக்ஷேமம்-நலச் செய்தி.
யோகநித்திரை -அறிதுயில்.
யோகம்-தவநிலை, ஒன்று தல், சேர்தல், கூடுதல், மனவொருக்கம், நல்வினை, கூட்டம்.
யோகாப்பியாசம் -தவமுயற்சி, ஒன் றும்முயற்சி. யோகி -முனிவன், தவத்தோன்.
யோகீச்சுவரர் -தவமுதல்வர், தவத்தலைவர்.
யோக்கியதா பத்திரம் -தகுதிச்சீட்டு.
யாக்கியம்-பதைதகுதி.
யோக்கியன்-தக்கோன், தகுதியுடையவன்.
யோசனை -ஓர்வு, ஆராய்ச்சி,சூழ்ச்சி.
யோனி -கருப்பை, பிறப்புறுப்பு.
“யௌ”சங்கதம்/ தமிழ்
யௌவன தசை -இளமைக்காலம்.
யௌவனம் -அழகு, இளமை.




