
தலைப்பு :-
*போராட்டம்*
மின்னல் கீற்றாய்
முறுக்கி தொடர்ந்து !
கன்னம் சிவக்க
கருத்தை உமிழ்ந்து !
சின்னச் செயலும்
சிந்தைக் குடைய !
உன்னை நிறுத்தி
உரக்கப் போராடு !
ஏற்றம் இறக்கம்
எதையும் எதிர்த்து !
தூற்றல் பணிதல்
துவளல் தவிர்த்து !
ஆற்றல் கொண்டு
ஆளுமை முறைத்து !
ஏற்றும் தணலாய்
எழுந்து போராடு !
ஆட்கள் அடிமை
அடைத்தல் கண்டு !
வட்டம் போடும்
வேட்டைக் கழுகாய் !
முட்கள் நிறைந்த
மலையை நோக்கி !
வேட்டு வைக்க
விரைந்து போராடு !
எழுவாய் மனிதா
எரியும் மலையாய் !
உழுவாய் களத்தில்
உயர்ந்த பனையாய் !
அழிப்பாய் முடிவாய்
ஆவணக் கொலையை !
விழிப்பாய் இருந்து
வீரனாய்ப் போராடு .!
*கவிச்சிற்பி கவிகெஜா*
( எ )
” சேவாரத்னா “
மதிப்புறு முனைவர்
*மா. கஜேந்திரன்*
அண்ணனூர்,
திருமுல்லைவாயில் ,
சென்னை.
17-06-2024
குறிப்பு :-
மரபுக் கவிதை
நிலைமண்டில ஆசிரியப்பா.
4 சீர்கள் / 16 அடிகள்.
போராடு
(நேரிசை வெண்பா)
இனமானம் கொள்ளவா எப்படையு மாள
மனச்சான்று கொண்டெழு மாந்தன்–கனத்தெழு
காயங்கள் மாறாது காரிருள் போர்வையில்
மாயங்கள் சூழாமல் மாற்று.
போராடு நீயாரு பொல்லாப்பு ஒட்டவே
வேரோடு நீராடு வெற்றியே–பாரோடும்
பற்றோடும் பைந்தமிழ் பண்போடும் போராடு
உற்றோரும் நற்றோரு மோங்கு.
பட்டதும் கெட்டதும் பட்டொளி வீசவே
எட்டவும் ஏற்றமும் இந்நாளே–முட்டவும்
தட்டவும் முப்படை தொட்டதும் மூவேந்தன்
கட்டமும் கட்டினான் காண்.
செந்நீர் உறைந்த செழுமுடல் வேள்வியில்
எந்நீர் துடைக்க ஏற்றமோ?–முந்நீர்
பிளந்து முழுதடம் பற்றி வலியின்
களத்தினைக் கண்டு கலங்கு.
சக்தி.செல்வகுமாரவேல்
பண்ணுருட்டி
9442361636/9942186212
போராடு…!
போராடு மானிடா உன்
பிறப்பே ஓர் போராட்டத்தின்
விளைவாகும் அறிந்தே
போரிடு பின் சொல்லாடு
சூதினை விலக்கி நல்ல
வேள்வி தனில் தமை
சேர்த்திட்ட வீரர் தமை
மனநிறைவொடு போரிடு
தேசம் மீட்டெடுக்க
தேசியம் காத்திட நீ
வீரனாய்ப் போரிடு
ஊழ் என்றெண்ணி
வீழ்ந்து கிடப்பதில்
பயன் ஏதுமுண்டோ?!!
தாய் மடியில் நீ
இளைப்பாற போராடு
பின் வாழு சீரோடு…!
சிவதர்சனி. இரா
தலைப்பு ; போராடு
போராடினால் தான் விடுதலைகிட்டும் சீரோடு//
இயலாமையை பிடிங்கி எறிதோழா வேறோடு//
அடங்கியது போதும் ஆளத்துணிந்து களத்துக்குவா// மேலாளுமையை கண்டு அஞ்சாதே தீப்பந்தம் ஏந்தடா// முயற்சி செய் புரட்சி செய் மலையும் மடுவாகும்// அடிமை சங்கிலியை எவனும் அவிழ்கமாட்டான்// தகர்க்க நாமே ஒன்றுகூடுவோம் போர் பரணி பாடிடுவோம்// வீரத்தின் வழிவந்த இனத்தினை சிறுநரிகள் ஆழ்வதா// வேங்கையின் வழித்தோன்றலே வெகுண்டெழுந்து போராடு// உலகத்தை கட்டியாண்ட தமிழன் மண்டியிட்டு வாழ்வதா//. வாழ்வது ஒருமுறை அது தாய் மண்ணுக்காக இருக்கட்டும்// உடலின் செங்குருதி மண்ணை நனைத்தாலும் போராட்டம் ஓயாது// ஓய்வின்றி வீசும் கடலின் அலைபோல போர்ச்சங்கை ஊதடா// தமிழனைப் போல் தரணியிலே வீரன் இங்கே யாரடா// நாளைய தாய்மண் நமதாகும் // உலகத் தமிழன் துணையுண்டு உரிமைக்கு போராடு குறிச்சி சிவா-
ஏக இறைவனின் திருப்பெயரால்…
போராடு !
உணவு இன்றி
வயிற்றின் வறுமை
உயிரைத் தின்னும்
நிலைக்கு வந்து…
உணர்வு இன்றி
வலிமை இன்றி
உறங்கிப் போனதோ
தன்மானம் ?
இனத்தைப் பெருக்க
இல்லற வாழ்வில்
இறங்கி விட்ட
இன்றைய மக்கள்…
இணங்க வில்லை
புரட்சி செய்ய
இறந்து போனதோ
தன்மானம் ?
இறைவன் நாடினால்
எதுவும் மாறலாம்
கரையும் கனவுகளும்
கரையை சேரலாம்…
இறையருள் இருந்தால்
இயலாத யாவும்
அரைநொடி போதும்
அரங்கினில் ஏறும்…
சிறைபட வேண்டாம்
சிறக்கட்டும் முயற்சி
விரைவில் வெற்றிக்கு
வித்திடும் பயிற்சி…
பொறுமையை முதலீடாய்
போட்டுவைத்து போராடு
திறமையை கண்டறிந்து
தேடிவரும் பாராட்டு !
———-
ஏக இறைவனின் திருப்பெயரால்…
போராடு !
உணவு இன்றி
வைற்றின் வறுமை
உயிரைத் தின்னும்
நிலைக்கு வந்து…
உணர்வு இன்றி
வலிமை இன்றி
உறங்கிப் போனதோ
தன்மானம் ?
இனத்தைப் பெருக்க
இல்லற வாழ்வில்
இறங்கி விட்ட
இன்றைய மக்கள்…
இணங்க வில்லை
புரச்சி செய்ய
இறந்து போனதோ
தன்மானம் ?
இறைவன் நாடினால்
எதுவும் மாறலாம்
கரையும் கனவுகளும்
கரையை சேரலாம்…
இறையருள் இருந்தால்
இயலாத யாவும்
அரைநொடி போதும்
அரங்கினில் ஏறும்…
சிறைபட வேண்டாம்
சிறக்கட்டும் முயற்சி
விரைவில் வெற்றிக்கு
வித்திடும் பயிற்சி…
பொறுமையை முதலீடாய்
போட்டுவைத்து போராடு
திறமையை கண்டறிந்து
தேடிவரும் பாராட்டு !
-ஆ.முருகானந்தம்
தமிழ்மண் கலைக்கூடம்
திருச்சிராப்பள்ளி
வாழ்வே போராட்டம்
அந்திவெண் நிலவின் பாலை,
ஆறிய கூழில் ஊற்றி,
நைந்தஎம் உயிரைக் காக்க,
நாவினை நனைத்து வைத்தோம்!
இந்தஓர் யாக்கைக் குள்ளே,
இரையிடும் பையை வைத்தான்!
கந்தனைப் பெற்ற ஈசன்,
காத்திட வரும்நாள் என்றோ?
வந்தெமைப் பிடித்த நோய்முன்
வளர்ச்சியில் நலிந்து விட்டோம்!
வெந்ததைத் தின்று வாழ
ஊழ்யெமக் கமைய வில்லை!
சிந்திடும் கண்ணீர் ஊற்றி
உயிரைத் தாங்கு கின்றோம்!
குந்திட இடமு மில்லை,
கூற்றுவன் வரவு மில்லை!
கந்தலால் மானம் காத்துக்
காரிருள் ஒளிந்து வாழ்ந்தோம்!
செந்தணல் பசியும் பற்றச்
செத்திடத் தோன்றும் எண்ணம்!
உந்தியில் மூண்டத் தீயால்
ஊழ்வினைத் தொடரக் கண்டோம்!
இந்நிலை மாற நாங்கள்
இழந்திட ஒன்று மில்லை!
சு.வி.லட்சுமி




