ஈழம்வரலாற்றில் இன்று

செம்மணிப்படுகொலை : கிருசாந்தியின் நினைவுநாள்!

செம்மணிப்படுகொலை வரலாற்றுச்சுருக்கம்.

வெளிச்சத்திற்கு வந்த கிருசாந்தியின் படுகொலையும் , செம்மணிப்புதைகுழியும் ..!

கிருசாந்தி குமாரசுவாமி யாழ்ப்பாணத்தின் மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி.

இந்த பெயர்  யார்க்கும்  நினைவில் இல்லை என்றாலும்,  செம்மணிப் புதைகுழி என்று சொன்னால் உங்களுக்கு ஏதோ ஒரு நினைவு வரக்கூடும் .

யார் இந்தக் கிருசாந்தி , செம்மணிப்புதைகுழி வரலாறு என்ன? என்பதைப் பார்ப்போம் .

கிருசாந்தி என்பவர் 18 அகவை நிரம்பிய உயர்தரம் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவி . பாடசாலையில் உயர்தரத் தேர்வை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது நடந்தது தான் என்ன ?

தூய்மைப் பணியகத்தின் முதன்மை பொறுப்பாளராக இருந்த அவரது தந்தை கிருசாந்திக்கு ஆறு வகை இருக்கும்போது இந்த உலகை நீத்திருக்கின்றார். அதன்பின் அன்னையின் வளர்ப்பில் கிருசாந்தியும் அவருடைய உடன் பிறந்தவன் பிரணவன் மற்றும் கிருசாந்தியின் உடன் பிறந்தவள் பிரசாந்தியும் வாழ்ந்து வந்துள்ளனர் .  11 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்வில்   கிரிசாந்தி எட்டு டி  என்ற புள்ளிகளை பெற்று மிகச் சிறப்பான ஒரு மாணவியாக இருந்து , உயர்தரத்தில் வேதியல் பாடத்தை எடுத்து அந்த தேர்வை முடித்துவிட்டு வீட்டுக்கு வருகின்ற அந்த நேரத்தில் ,வழியில் செம்மணியை ஒட்டி இருக்கின்ற படைத்துறை காவலரண் முன் தடுத்து  நிறுத்தப்படுகின்றாள் .

கிருசாந்தியின் தாய்  பெயர் ராசம்மா. இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து பட்டம் பெற்றவர் .கைதடி முத்துக்குமாரசாமி பாடசாலையில் துணை முதல்வராக பணியாற்றியவர் .38 ஆண்டுகாலம் ஆசிரியர் தொண்டை ஆற்றியவர் .அந்த ராசம்மாவும் அந்த நாள் இறந்து போய் இருக்கின்றார். இங்கே என்ன நடந்தது என்பதை பார்ப்போம் .

மடங்கல் திங்கள்  ஏழாம் நாள் உயர்தரத் தேர்வில் வேதியல் பாடத் தேர்வை முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவி “யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கின்றது “ என்ற செம்மணியில் உள்ள படைத்துறை காவலரண்முன் தடுத்து நிறுத்தப்படுகின்றார். தடுத்து நிறுத்தப்பட்டவள் தொடர்ந்து அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்ட போது ஊராரிதனை உண்ணிக்கின்றார்கள் . மாலையாகியும் மகளைக் காணாமல் தாய் தேடிக்கொண்டிருக்கையில், ஊரார் சென்று தாயிடம் கூற ,அவரது தாயார் கிருசாந்தியைத் தேடி அயல் வீட்டுக்காரர்களான கிருபா மூர்த்தி சிதம்பரம் அவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்படுகையில் கிருசாந்தியின் உடன்பிறப்பான பிரணவன் சிறப்பு வகுப்பு முடித்து வீட்டிற்கு வந்தான் . பிரணவன் தானும் வருகிறேன் என்று கூறி , அவனும்  சேர்ந்து எல்லோருமாக  கிருசாந்தி தடுத்து நிறுத்தப்பட்ட காவலரணுக்குச் செல்கின்றனர் . அங்கு சென்று கிருசாந்தி எங்கே என்று கேட்டபோது , தாங்கள் அப்படி ஒருவரைத் தடுத்து வைக்கவில்லை என்று படைத்துறையினர் கூறியிருக்கின்றனர் . கிருசாந்தியின் தாயார்  தொடர்ந்து சொல்லாடல் செய்துள்ளார் .   ஊரார் கண்டதாகவும் குழந்தை இங்கே தான் இருக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார் . ஏற்கனவே மூன்று பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்த கிருசாந்தியை இவர்களோடு அனுப்பவும் முடியாமல் இந்த மூவரையும் அடித்து கொன்றனர் படைத்துறையினர் . செம்மணியில் மூன்று புதைகுழியில் 4 உடல்கள் புதைக்கப்பட்டன . மூன்று புதைகுழியில் இருந்து நான்கு சடலங்கலாக இவர்கள் மீட்கப்பட்டார்கள் .

ஏற்கனவே மூன்று படைத்துறையினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான கிருசாந்தி மேலும் ஒன்பது படைத்துறையினராலும் இரண்டு காவல்துறை படையினராலும் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றார். பிறகு அவள் கொலை செய்யப்படுகின்றாள் .கொலை செய்யப்பட்டவர்கள் செம்மணியில் வைத்து புதைக்கப்படுகின்றார்கள் . இதனை ஒரு சிறுவன் கண்டிருக்கின்றான் . சிறுவனின் சான்றின் அடிப்படையில் உடல்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன .ஒன்றரைத் திங்கள்களுக்கு பிறகு இந்த உடல்கள்  தோண்டி எடுக்கப்படுகின்றன . கிருசாந்தியின் தங்கையான பிரசாந்தி, தன்னுடைய தமக்கை  கிருசாந்திக்கும்  அவருடைய தாயாருக்கும் தன்னுடைய உடன்  பிறந்தவனுக்கும் அயல் வீட்டுக்காரருக்கும் என்ன நடந்தது என்று கேட்டு இலங்கையின் முதல்வருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதுகின்றார். அதன் பிறகு இச்செய்தி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

1998 ஆம் ஆண்டு  இக்குற்றத்தில் ஈடுபட்ட இரு  படைத்துறையினருக்கும் ஒரு காவல்துறைக்கும்  தூக்கு ஒறுத்தல் வழங்கப்படுகிறது . அதேபோல மூவருக்கு 20 க்கு ஆண்டு கால சிறை ஒறுத்தல் வழங்கப்படுகிறது .கிருசாந்தி உட்பட கிருசாந்தியின் உடன்பிறப்பு கிரிசாந்தியின் தாயார் மற்றும் அயல் வீட்டுக்காரர் ஆகியோரின்  உடல்களைத் தோண்டி எடுத்த பின்னர் அவ்விடம் ஒரு சுடுகாட்டைப் போல காட்சி அளித்திருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக  அந்த இடத்தை தோண்டத் தோண்ட 15 உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன. 15 உடல்களும் இளைஞர்களின் உடல்களாக காணப்பட்டன .இச்செய்திகளை வெளிக்கொண்டு வருவதற்கு அன்றிருந்த யாழ்ப்பாண நாளிதழுக்கான தணிக்கைகள் பெரிய தடையாக இருந்தன . கிருசாந்தியின் உறவினர்கள்,  இவர்களின் உடல்களைக் கொழும்புக்குக் கொண்டு வருவதற்கு அரசு ஒப்புதல் மறுத்திருந்தது.   மாற்றாக 5 பேரின் உடல்களையும்  தருவதாக படைத்துறை கூறியது. யாழ்ப்பாணத்திலேயே இறுதிச் சடங்குகளை செய்யுமாறு வற்புறுத்தியது.  குமார் பொன்னம்பலம் மற்றும் கிருசாந்தியின் வீட்டார் டி பூபாலர் அவர்களுடைய சட்ட நடவடிக்கையின் ஊடாக உடல்களை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு ஒப்புக் கொண்டது அரசு.

ஆயினும் யாழ்ப்பாண நீதவான் கூறிய கட்டளையின் அடிப்படையில் ,அன்றைய யாழ்பாண முதல்வரிடம் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என்பதை அவர்கள் பொருட்டாக காட்டி உறவினர்களிடம் அவர்களுடைய உடல்களை கையளிக்கக் காவல்துறையினர் மறுத்தனர்.  மீண்டும் சட்டத்தரணிகள் இவ்விடத்தில் தலையிட்டதன் பெயரில் 25 ஆம் நாள் உடற்கூறாய்வு முடிந்த பின்னர்  , இறுதிச் சடங்குகள் செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டளைக்கு உட்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன .அதன்பின் கரந்தையில் உடல்கள்  அடக்கம் செய்யப்பட்டன.

கிரிசாந்தியின் உறவினர் நவரத்தினம் அவர்களின் கருத்துப்படி இரண்டு லட்சம் பெறுமதியான நகைகளும் சூறையாடப்பட்டிருந்தன. இந்த வழக்குக்கு  முதன்மைச் சான்றாக இருந்தது ஒருவருடைய வாய்மொழிச் சான்றே.

கிருசாந்தியும் அவர்களுடைய தாயாரும் உடன் பிறந்தவனும் , அயலவரும்  காணாமற் போனதிலிருந்து ,அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக முயற்சி செய்த ஒருவர்தான்  கிருசாந்தியின் உறவினரான யாழ்ப்பாண அஞ்சல் துணைத்தலைவரான சுப்பிரமணியம் கோடீசுவரன் . இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளே செம்மணிப் புதைகுழியை உலகறிய செய்தது என்பது பலரும் அறியாத செய்தியே .

கிருசாந்தி காணாமல் போனதிலிருந்து , ஒரு நாள் கைத்தடியில் இருந்து அவரது ஊரான இந்து கல்லூரிக்கு மிதியுந்தில் சென்று கொண்டிருந்த தனது உடன்பிறந்தவளின் மகன் , வழியில் அரியாளைப் பகுதியில் இருந்த  மிதியுந்துக் கடை ஒன்றில் கிரிசாந்தியின் உடன்பிறப்பான பிரணவனின் மிதியுந்தை ஒரு மிதியுந்துக் கடையில் தொங்கவிட்டு இருப்பதை கண்டு இருக்கின்றார். மிதியுந்தில் ஒட்டப்பட்டு இருக்கின்ற அந்த படம் ஒன்றை வைத்து அவன் அடையாளம் கண்டுபிடிக்கின்றான். அதன் விளைவாக அச்சிறுவன் இவர்களுடைய மாமனாரிடம் அந்த செய்தியை அறியச் செய்கின்றான் .  இச்செய்தியை யாழ்ப்பாண படைத்துறையின் 512-ம் பிரிவுக்கு அவர் அறிவித்திருக்கின்றார் . மேலாய்வுகளை முன்னெடுத்த 512 ஆம் படைப்பிரிவைச் சேர்ந்த படைத்துறைக்  காவலர் கோடீசுவரனை அழைத்துக் கொண்டு கிருசாந்தியின்  கல்லூரிக்கு சென்று மிதியுந்தை அடையாளம் காட்டிய உடன்பிறப்பின் மகனை அழைத்துக்கொண்டு கொண்டு வந்து இதற்கான ஆய்வை மேற்கொண்டனர் . அதன் அடிப்படையில் அந்த மிதியுந்துக் கடைக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர் . காவற்துறையினரால் அம்மிதியிந்து கடைக்கு  வரும் ஒருவரின் ஊடாக அக்கடைக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டது என்று தெரிய வருகிறது. மேலாய்வுகள் மூலம் செம்மணி காவல் பணிமனையில் இருந்த படையினர் கிருசாந்தியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் ,  அதன் பின்னர் அவரைத் தேடி வந்த அவருடைய குடும்ப உறவுகள் அயல் வீட்டுக்காரர்களையும் கொலை செய்து புதைத்த  உண்மையை கண்டறிந்தார்கள். இந்த நிகழ்வோடு தொடர்புடைய படைத்துறைப் பணியாளர் கொழும்பில் கூடுதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டார்.அதன்பின்னரே செம்மணிப்படுகொலை வெளிச்சத்திற்கு வந்தது .

இவற்றைக் கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்த கிருசுணமூர்த்தி அவர்கள் தனது தங்கையின் மகனின் செய்திகளை அடிப்படையாக வைத்து உடனடியாக படைத்துறையினரிடம்  முறைப்பாடு செய்து வழக்கு ஆய்வுகளில் பங்கு பெற்று வழக்கை முன்னெடுத்ததன் மூலம், செம்மொழி புதைகுழியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற உண்மையை கொண்டு வருவதற்கு அன்றைய நெருக்கடியான சூழலில் உயிரச்சம் இருக்கின்றது என்று தெரிந்தும் இந்த முயற்சியை அவர் முன்னெடுக்காமல் இருந்திருந்தால், கிருசாந்தி குமாரசாமி கொன்று புதைக்கப்பட்ட உண்மையும்,   நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்ட அந்த செம்மணி புதைகுழிகளும் இதுவரை அறியப்படாமலே இருந்திருக்கும். கிருசாந்தி குமாரசாமி அவர்களுடைய செம்மணிப் புதைகுழி படுகொலை வரலாற்றுச் சுருக்கம் இதுவே .

இப்படி ஆயிரம் ஆயிரம் புதைகுழிகள் தமிழர்களுக்காக ஈழத்திருநாட்டில் தோண்டப்பட்டுள்ளதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இப்பதிவை பதிவுசெய்கின்றோம் .

எழுத்து : நிலா

நன்றி

வாழ்க தமிழ் ..!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button