தமிழ்பிறமொழி/தமிழ்
ஓகவிருக்கைகளின் தமிழ்ப்பெயர்களுக்கு இணையான பிறமொழிப்பெயர்கள் :- (தமிழ் , வடமொழி, ஆங்கிலம்)

| தமிழ்ச்சொல் | வடமொழிச்சொல் |
| தீதகற்றல் | இயமம் |
| நன்றாற்றல் | நியமம் |
| இருக்கை | ஆசனம் |
| உயிர்வளிநிலை | பிராணாயாமம் |
| தொகைநிலை | பிரத்தியாகாரம் |
| பொறைநிலை | தாரணை |
| உள்குதல் | தியானம் |
| நொசிப்பு | சமாதி |
ஓகவிருக்கைகளின் தமிழ்ப்பெயர்களுக்கு இணையான பிறமொழிப்பெயர்கள் :-
(தமிழ் , வடமொழி, ஆங்கிலம்)
- ௧. ஞாயிறு வணக்கம் – சூரிய நமசுகாரம் – SALUTE TO THE SUN.
- ௨. ஒற்றைக்கால் ஞாயிறுவணக்கம்– ஏகபாத சூரிய நமசுகாரம் – SALUTE THE SUN ON ONE LEG.
- ௩. அரைநிலாவிருக்கை – அர்த்த சந்திராசனம் – CRESCENT POSTURE.
- ௪. மலையிருக்கை – மேரு ஆசனம் – MOUNTAIN POSTURE.
- ௫. மலைநிமிர்விருக்கை – தாடாசனம் – MOUNTAIN ERECT POSTURE.
நிலைத்திணை / பயிருயிரிகள் – PLANTS.
- ௬. தாமரையிருக்கை – பத்மாசனம் – LOTUS POSTURE.
- ௭. எழும்பு தாமரையிருக்கை – உத்தித பத்மாசனம் – RAISED LOTUS POSTURE.
- ௮. பூட்டிய தாமரையிருக்கை – பத்த பத்மாசனம் – LOCKED LOTUS POSTURE.
- ௯. நாணல்முதுகிருக்கை – பச்சிமோத்தாசனம் – BACK ERECTING POSTURE.
- ௰. மரவிருக்கை – டோலாசனம் – TREE POSTURE.
- ௰௧. மூங்கில்வளைவிருக்கை/கை கால் இணைவிருக்கை- பாத அசுதாசனம் – HAND AND FOOT POSTURE.
விலங்கு – CREATURES/நீருயிரிகள் – AQUATICS
- ௰௨. தவளையிருக்கை – பெக்காசனம் – FROG POSTURE.
- ௰௩. மீனிருக்கை – மச்சாசனம் – FISH POSTURE.
- ௰௪. சுறவமிருக்கை – மகராசனம் – SHARK POSTURE.
- ௰௫. முதலையிருக்கை – மக்கராசனம் – CROCADILE POSTURE.
- ௰௬. சங்கிருக்கை /உடல்முறுக்குமிருக்கை – வக்ராசனம் – SEA SHELL POSTURE
- ௰௭. ஆமையிருக்கை – கூர்மாசனம் – TORTOISE POSTURE.
- ௰௮. கை நீட்டிய ஆமையிருக்கை –விக்சேபம் /கூர்மாசனம் – HAND STRETCHED TORTOISE POSTURE.
ஊர்வன – REPTILES.
- ௰௯. தேளிருக்கை – விருச்சிக ஆசனம் – SCORPION POSTURE.
- ௰௰. பாம்பிருக்கை – புசங்காசனம் – SERPENT POSTURE.
நடப்பன – VERTEBRATE.
- ௰௰௧. ஆமுகவாயிருக்கை – கோமுகாசனம் – COW FACE POSTURE.
- ௰௰௨. ஆவினிருக்கை – கோவாசனம் – COW POSTURE.
- ௰௰௩. பூனையிருக்கை – பில்லியாசனம் – CAT POSTURE.
- ௰௰௪. ஒட்டகவிருக்கை – உசர்ட்டாசனம் – CAMEL POSTURE.
- ௰௰௫. நாய்முகவிருக்கை – அதோமுக சுனங்கனாசனம்– DOG FACE POSTURE.
- ௰௰௬. புலியிருக்கை – வியாகராசனம் – TIGER POSTURE.
- ௰௰௭. அரிமாயிருக்கை – சிம்மாசனம் – LION POSTURE.
- ௰௰௮. மிடுக்கான குதிரையிருக்கை – கம்பீர அசுவினி தீரனாசனம்– BRA.
- ௰௰௯. முயலிருக்கை – சசாங்காசனம் – RABBIT POSTURE.
- ௩௰. நரியிருக்கை – மார்சரி ஆசனம் – FOX POSTURE.
பறப்பன – AVES & INSECTS.
- ௩௰௧. வெட்டுக்கிளியிருக்கை – சலபாசனம் – GRASSHOPPER (LOCUST) POSTURE.
- ௩௰௨. அரை வெட்டுக்கிளியிருக்கை – அர்த்தசலபாசனம் – SEMI GRASSHOPPER POSTURE.
- ௩௰௩. மயிலிருக்கை – மயூராசனம் – PEACOCK POSTURE.
- ௩௰௪. புறாவிருக்கை – கப்போட்டாசனம் – DOVE POSTURE.
- ௩௰௫. பறக்கும் புறாவிருக்கை – உடுத்தாஉவா கப்போர்ட்டா– FLYNG DOVE POSTURE.
- ௩௰௬. கொக்குவிருக்கை – பக்காசனம் – CRANE POSTURE.
- ௩௰௭. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை – ஏகபாத பக்காசனம் – SINGLE FOOTED CRANE POSTURE.
- ௩௰௮. கலுழனிருக்கை – கருடாசனம் – EAGLE POSTURE.
- ௩௰௯. சேவலிருக்கை – குக்குடாசனம் – COCK POSTURE.
- ௪௰. நிற்கும் மயிலிருக்கை – கடுடா மயூராசனம் – STANDING PEACOCK POSTURE.
- ௪௰௧. வாத்திருக்கை – அம்சாசனம் – DUCK POSTURE.
நடனம் – DANCE.
- ௪௰௨. நடன இருக்கை – நடனாசனம் – POSTURE OF NATARASA.
- ௪௰௩. களிக்கூத்து – ஆனந்த தாண்டவம் – PLEASURE DANCE POSTURE.
- ௪௰௪. கூத்தரசனிருக்கை – நடராச ஆசனம் – KING OF DANCE POSTURE.
- ௪௰௫. வீர அடைவிருக்கை – வீர அனுமான் ஆசனம் – BRAVE STEP POSTURE.
முத்திரை – GESTURE.
- ௪௰௬. ஓக முத்திரை – யோகமுத்ரா – OGAM GESTURE.
- ௪௰௭. பெரு முத்திரை – மகாமுத்ரா – GREAT GESTURE.
- ௪௰௮. படையல் முத்திரை – அஞ்சலி முத்ரா – HOMAGE GESTURE.
- ௪௰௯. குதிரை மலவாய் முத்திரை – அசுவினி முத்ரா – HORSE’S ANAL GESTURE.
- ௫௰. ஆறுமுக முத்திரை – சண்முக முத்ரா – HEXAGON GESTURE.
கருவிகள் – TOOLS :-
- ௫௰௧. நாற்காலியிருக்கை – உட்கட்டாசனம் – CHAIR POSTURE.
- ௫௰௨. அரசரிருக்கை – பூரண உட்கட்டாசனம் – THRONE POSTURE.
- ௫௰௩. சக்கரவிருக்கை – சக்ராசனம் – WHEEL POSTURE.
- ௫௰௪. அரைசக்கரவிருக்கை – அர்த்தகடி சக்கராசனம் – SEMI WHEEL POSTURE.
- ௫௰௫. வில்லிருக்கை – தனுராசனம் – BOW POSTURE.
- ௫௰௬. காதருகுவில்லிருக்கை – ஆகர்ண தனுராசனம் – EXTENDED BOW POSTURE.
- ௫௰௭. படகிருக்கை / நாவாய்யிருக்கை – நவாசனம் – BOAT POSTURE.
- ௫௰௮. முக்கோணவிருக்கை – திரிகோனாசனம் – TRIANGLE POSTURE.
- ௫௰௯. பரிமாற்ற முக்கோணவிருக்கை – பரிவர்த்த திரிகோனாசனம்– TRANSFER TRIANGLE POSTURE.
- ௬௰. கலப்பை / ஏர் / உழவிருக்கை – அலாசனம் – PLOUGH POSTURE.
தொழில் – ACTIVITIES .
- ௬௰௧. வழிபாட்டிருக்கை – சசாங்காசனம் – WORSHIP POSTURE.
- ௬௰௨. வீரவிருக்கை – வீராசனம் – BRAVE POSTURE.
- ௬௰௩. நெற்றிக்கண்வழியனிருக்கை – வீரபத்ராசனம் – GLABELLA VIEW POSTURE.
- ௬௰௪. அம்மியரைக்கு மிருக்கை – உபவிசுட்டகோணாசனம் – GRINDING POSTURE.
- ௬௰௫. காலணிதையலிருக்கை – பத்ராசனம் – SHOEMAKER POSTURE.
- ௬௰௬. தேரோட்டியிருக்கை – சாரதாசனம் – CHARIOT RIDER POSTURE.
- ௬௰௭. தலை முழங்காலிருக்கை/ பூத்தொடுக்கும் இருக்கை – சானுசீராசனம் – HORIZONTAL UPOSTURE , MAKING GARLAND POSTURE.
உடலுறுப்புகள் – ORGANS OF HUMAN BODY .
- ௬௰௮. இணைக்காலடிஇருக்கை – சமபாதாசனம் – PARRALLEL FOOT POSTURE.
- ௬௰௯. ஒரு காலூன்றியிருக்கை – நின்ற பாதாசனம் – SINGLE LEG POSTURE.
- ௭௰. கோணவிருக்கை – கோணாசனம் – ANGLED POSTURE.
- ௭௰௧. விலாப்பக்க கோணவிருக்கை – பார்சுவ கோணாசனம் – RIBSIDE ANGLED POSTURE.
- ௭௰௨. மண்டிவல்லிருக்கை – வச்சிராசனம் – FIRM KNEELING POSTURE.
- ௭௰௩. மழலையிருக்கை – பாலாசனம் – CHILD POSTURE.
- ௭௰௪. கிடைநிலை வல்லிருக்கை – சுப்த வச்சிராசனம் – SUPINE ANKLE POSTURE.
- ௭௰௫. குந்தி கைகூப்பிருக்கை – உட்கட்டாசனம் – PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD.
- ௭௰௬. கைகூப்பு கைத்தாமரையிருக்கை- பர்வட்டாசனம் – OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE.
- ௭௰௭. மாற்று அமரிருக்கை – அர்த்தமத்ச்யேந்தராசனம் – CONTRA SITTING POSTURE.
- ௭௰௮. பூட்டிய கோணவிருக்கை – பத்தகோணாசனம் – LOCKED ANGLE POSTURE.
- ௭௰௯. நீள்காலடியிருக்கை – உத்தான பாதாசனம் – RAISED FOOT ERECT.
- ௮௰. ஓகத்துயில் – யோக நித்ரா – OGAM SLEEP.
- ௮௰௧. அரையுடலிருக்கை – விபரீதகரணி – HIP STAND POSTURE.
- ௮௰௨. முழுவுடலிருக்கை – சர்வாங்காசனம் – SHOULDER STAND.
- ௮௰௩. பாதி முழுவுடலிருக்கை – பர்வதாசனம் – SEMI SHOULDER STAND.
- ௮௰௪. மேடையிருக்கை – பீடாசனம் – STAGE POSTURE.
- ௮௰௫. பகுதலையிருக்கை – அர்த்த சிரசாசனம் – SEMI INVERTTED.
- ௮௰௬. தலையிருக்கை – சிரசாசனம் – INVERTTED POSTURE.
தூய்மை – CLEANSING.
- ௮௰௭. வளிகழித்தலிருக்கை – பவன முக்தாசனம் – WIND RELEASING TECHNIQUE.
- ௮௰௮. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை – உட்டியானபந்தம் – FLYUP LOCK.
- ௮௰௯. குடல் சுழற்றியிருக்கை – நௌலி – BOWEL CIRCULATING POSTURE.
- ௯௰. மூச்சொழுக்கம் – பிராணாயாமம் –ORDER OF BREATH.
- ௯௰௧. தலைத்தூய்மை – கபாலபாதி – CLEANSING OF BRAIN.
- ௯௰௨. துருத்தி மூச்சு – பசுதிரிகா – BELLOW BREATH.
- ௯௰௩. சீழ்க்கை – சீத்காரி – WHISTLING.
- ௯௰௪. நீர்த்தூய்மை – சலநேதி – WATER CLEANSING.
- ௯௰௫. குளிர்ச்சீழ்க்கை – சீத்தளி – COOL WHISTLE.
- ௯௰௬. மூலக்கட்டு – மூலபந்தம் – ANAL CONTRACTION.
- ௯௰௭. நாடித்தூய்மை – நாடி சுத்தி – CLEANSING OF PULSE.
- ௯௰௮. தேனீயொலி – பிராமரி – HONEY BEE HISSING.
- ௯௰௯. கண்தூய்மை – திராடகா – EYE CLEANSING.
- ௱. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் – சதந்தா – INHALING THROUGH CLEANCHED TEETH.
- ௱௧. உள்மூச்சு – அனுலோமம் – INHALING.
- ௱௨. வெளிமூச்சு – விலோமம் – EXHALING.
- ௱௩. தொண்டை ஒலி – உச்சயி – HISSING OF PHARYNX.
நிறைவுநிலை – PACIFICATION .
- ௱௪. இயல்பிருக்கை – சுகாசனம் – AT EASE POSTURE.
- ௱௫. அமைதியிருக்கை – சவாசனம்– LYING RELAX POSTURE.


